• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மேக் இன் ஒடிசா திட்டத்தில் ₹3,000 கோடி முதலீடு - முகேஷ் அம்பானி அறிவிப்பு

மேக் இன் ஒடிசா திட்டத்தில் ₹3,000 கோடி முதலீடு - முகேஷ் அம்பானி அறிவிப்பு

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

#MakeInOdisha2018 | உலகம் தற்போது தொழில்நுட்ப புரட்சியை சந்தித்து வருவதாக கூறிய முகேஷ் அம்பானி, இதில் ஜியோ முக்கிய பங்காற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மேக் இன் ஒடிசா திட்டத்தின் கீழ் ஒடிசாவில் கூடுதலாக 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில், மேக் இன் ஒடிசா மாநாடு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பேசிய முகேஷ் அம்பானி, ஒடிசாவில் ரிலையன்ஸ் குழுமம் ஏற்கெனவே 6,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக உறுதியளித்தார்.

ஒடிசாவில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் 48 ஆயிரம் கிராமங்களை ஜியோ சேவை சென்றடைந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த சில மாதங்களில் பெரும்பாலான கிராம மக்கள் ஜியோ சேவையை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேக் இன் ஒடிசா என்பது மேக் நியூ ஒடிசா என்பதாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய தகவல் தொழில்நுட்பத்தில் ஜியோ முன்னணியில் உள்ளதாகவும் அவர் கூறினார். உலகம் தற்போது தொழில்நுட்ப புரட்சியை சந்தித்து வருவதாக கூறிய அவர், இதில் ஜியோ முக்கிய பங்காற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

Also watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:DS Gopinath
First published: