ரிலையன்ஸ் துணை நிறுவனமான
சாங்கியசூத்திரா (SankhyaSutra) ட்ரோன் விழாவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மென்பொருளை வெளியிட்டது
இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான – பாரத் ட்ரோன் மகோத்ஸவத் 2022 – ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, பாதுகாப்பு, பேரிடர் நிர்வாகம், வேளாண்மை, சுற்றுலா, திரைப்படம், பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். இந்த தொழில்நுட்பத்தின் பயன் வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பிரகதி ஆய்வுகள் மற்றும் கேதார்நாத் திட்டங்கள் ஆகிய உதாரணங்கள் மூலம் தமது அதிகாரபூர்வ முடிவை உருவாக்குவதில் ட்ரோன்கள் பயன்பாட்டையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஜியோ நிறுவனத்தின் துணை நிறுவனமும் உயர் நம்பகத்தன்மை கொண்ட பல இயற்பியல் மற்றும் ஏரோடைனமிக்ஸ் உருவகப்படுத்துதல் மென்பொருளை உருவாக்கும் பெங்களூருவைச் சேர்ந்த சாங்கியசூத்திரா (SankhyaSutra) நிறுவனம் தனது பொருட்களை காட்சிப்படுத்தியது. அடுத்த தலைமுறை உயர் நம்பகத்தன்மை கொண்ட CFD கருவிகளை உருவாக்கி வருவதாக SankhyaSutra Labs கூறியுள்ளது.
பாதுகாப்பில் தன்னம்பிக்கையைப் பற்றி பேசும்போது, பல்வேறு வன்பொருள் கூறுகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறனில் கவனம் செலுத்துகிறோம்" என்று SankhyaSutra Labs இன் CEO டாக்டர் சுனில் ஷெர்லேகர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்தார். ‘ உள்நாட்டிலேயே தயாரிக்கும் கருவிகள் இல்லாமல் நமது தேவையை நாமே பூர்த்தி செய்வதை நோக்கிய இந்த பயணம் முடியாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ட்ரோன் மகோத்ஸவத் 2022: பெங்களூர் ஸ்டார்ட் அப் நிறுவன ட்ரோனை பறக்கவிட்ட பிரதமர் மோடி
2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சாங்க்யசூத்ரா லேப்ஸ் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மையத்தை பெங்களூருவில் கொண்டுள்ளது. இங்கிருந்து உலக முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு செயல்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது முக்கிய தயாரிப்பை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
துல்லியமான மற்றும் நம்பகமான உருவகப்படுத்துதல்கள் விலை உயர்ந்த மற்றும் அதிக நேரம் எடுக்கும் பரிசோதனைகளை குறைக்கும் என்று சாங்க்யசூத்ரா ஆய்வகத்தின் வணிக மேம்பாட்டின் துணைத் தலைவர் டாக்டர் வினய் கரிவாலா தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 2019 இல் 216 கோடி ரூபாய் முதலீட்டில் சாங்க்யசூத்ரா லேப்ஸில் 83 சதவீத பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.