கொரோனாவை விரைவாக கண்டறியும் சாதனம்: இஸ்ரேலிய வல்லுநர்கள் இந்தியா வருவதற்கு அனுமதி கேட்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

முகேஷ் அம்பானி

கொரோனாவை விரைவாக கண்டறியும் சாதனத்தை இந்தியாவில் நிறுவதற்கும் பயிற்சி அளிப்பதற்கு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

 • Share this:
  கொரோனாவை விரைவாக கண்டறியும் சாதனத்தை இந்தியாவில் நிறுவதற்கும் பயிற்சி அளிப்பதற்கு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கோரிக்கைவைத்துள்ளது.

  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ப்ரீத் ஆஃப் ஹெல்த் என்ற நிறுவனம் மூச்சு வெளியிடுவதை வைத்து கொரோனா பாதிப்பு உள்ளதா இல்லையா? என்பதைக் கண்டறியும் கருவியைக் கண்டறிந்துள்ளது. அந்தச் சோதனையின் மூலம் சில விநாடிகளில் கொரோனா பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறிய முடியும். இந்தக் கருவி மூலம் மேற்கொண்ட சோதனையில் அதன் வெற்றி வீதம் 95 சதவீதமாக உள்ளது. அந்த நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் 110 கோடி ரூபாய்க்கு கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது.

  அந்த ஒப்பந்தத்தின்படி, ப்ரீத் ஆஃப் ஹெல்த் நிறுவனத்திடமிருந்து நூற்றுக்கணக்கான கருவிகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி, அதன்மூலம் மாதத்துக்கு 73 கோடி ரூபாய் மதிப்பில் லட்சக்கணக்கான சோதனைகளைச் செய்யவுள்ளது. ஏற்கெனவே அந்தக் கருவிகள் இந்தியாவுக்கு வந்தடைந்துவிட்டன. அந்தக் கருவிகளை இந்தியாவில் நிறுவுவதற்கும், அதன் செயல்பாடுகளை ரிலையன்ஸ் நிறுவனத்தினருக்கு சொல்லிக்கொடுக்கவும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவுக்கு வரவேண்டியத் தேவைஉள்ளது. இந்தநிலையில், இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு அந்நாட்டு குடிமகன்கள் செல்வதற்கு இஸ்ரேல் அரசு தடைவிதித்துள்ளது.

  அதன் காரணமாக, ப்ரீத் ஆஃப் ஹெல்த் நிறுவனத்தின் வல்லுநர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, இஸ்ரேலிய வல்லுநர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் சிறப்பு அனுமதிகோரியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சிறப்பு அனுமதி கிடைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: