ஹோம் /நியூஸ் /இந்தியா /

முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்... ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மர்ம நபர் அழைப்பு

முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்... ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மர்ம நபர் அழைப்பு

முகேஷ் அம்பானி, நிடா அம்பானி

முகேஷ் அம்பானி, நிடா அம்பானி

முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதோடு, ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் தான் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

  ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சுமார் 12.57 மணிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

  மேலும், மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் மர்ம நபர் எச்சரித்துள்ளார்.  இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் டிபி மார்க் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Mukesh ambani, Nita Ambani, Reliance Foundation