• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிபிஇ கிட் கழிவுகளைப் மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் பொருள்கள்- சி.எஸ்.ஐ.ஆருடன் இணைந்து ரிலையன்ஸ் புதிய முயற்சி

பிபிஇ கிட் கழிவுகளைப் மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் பொருள்கள்- சி.எஸ்.ஐ.ஆருடன் இணைந்து ரிலையன்ஸ் புதிய முயற்சி

ப்ளாஸ்டிக் பொருள்கள்

ப்ளாஸ்டிக் பொருள்கள்

கொரோனா பி.பி.இ கிட் கழிவுகளிலிருந்து பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பொருள்கைள உருவாக்கி ரிலையன்ஸ் நிறுவனம் சாதித்துள்ளது.

  • Share this:
    கொரோனா பாதிப்பு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சுகாதாரத்துறையிலிருந்து உருவாகும் கழிவுகள் குறித்து உரையாடல் மிகக்குறைந்த அளவே உள்ளது. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆய்வு(சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் புனேவிலுள்ள தேசிய வேதியியல் ஆய்வகம்(என்.சி.எல்) ரிலையன்ஸ் மற்றும் இதர நிறுவனங்களுடன் இணைந்து கொரோனாவுக்குப் பயன்படுத்தப்படும் பி.பி.இ கிட் கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரித்துள்ளன.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பி.பி.இ கிட், முகக் கவசம், கையுறை உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களுக்கான தேவை மிக அதிக அளவில் அதிகரித்தது. 2021-ம் ஆண்டு மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 200 டன் கொரோனா தொடர்பான கழிவுகள் உற்பத்தியாகின. பொதுவான இந்த ஆபத்தான கழிவுகள் மத்திய கழிவு மேலாண்மை மையத்தில் வைத்து முழுவதுமாக எரிக்கப்படுகிறது. ஆனால், கழிவுகளை இவ்வாறு எரிப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை. இதிலிருந்து வெளியேறும் வாயுகள் பசுமை இல்லத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

    சி.எஸ்.ஐ.ஆர் - என்.சி.எல், ரிலையன்ஸ் மற்றும் இதர நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தொடர்பான பிளாஸ்டிக் கழிவுகளை இறுதிவரை மறுசுழற்சி செய்து புதிய பிளாஸ்டிக் பொருள்களை செய்யும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த பரிசோதனை முயற்சியில் பிபிஇ கிட் மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் பொருள்கள் உருவாக்க முடிந்தது. இந்தியாவில் தற்போது இருக்கும் மறுசுழற்சி கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் செய்ய முடியும்.

    சி.எஸ்.ஐ.ஆர்-என்.சி.எல் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனத்துடன், பிபிஇ கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் பொருள்கை உற்பத்தி செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். புனேவிலுள்ள நிறுவனங்களுடன் இணைந்து முதல் மாதிரி முயற்சியாக 100 கி.லோ கழிவுகளிலிருந்து பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பி.பி.இ கிட் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அதில் பாஸ்கோ சுற்றுச்சூழல் திரவத்தை பயன்படுத்தி நச்சு ஏற்படுத்தும் மாசுக்கள் பிரித்துஎடுக்கப்படுகின்றன. இந்த தொடக்க மாதிரி திட்டத்தை செயல்படுத்த மகாராஷ்டிரா மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒழுங்குமுறை அனுமதிகளை சி.எஸ்.ஐ.ஆர்-என்.சி.எல் வாங்கிக் கொடுத்தது.

    இந்த மாதிரி செயல்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி நீடித்த பசுமை பொருளாதாரத்தை உருவாக்க முடியும். ஒப்பீட்டளவில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இந்த துறையில் இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்து இந்தியாவின் சமூக- சுற்றுச்சூழல் இலக்குகளுக்கு பங்களிக்க முடியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: