Home /News /national /

முகேஷ் அம்பானி குறித்த வதந்திகளுக்கு அடிப்படை ஆதாரமற்ற செய்தி என ரிலையன்ஸ் விளக்கம்

முகேஷ் அம்பானி குறித்த வதந்திகளுக்கு அடிப்படை ஆதாரமற்ற செய்தி என ரிலையன்ஸ் விளக்கம்

Mukesh ambani

Mukesh ambani

முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் மும்பையின் கம்பாலா ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். ரிலையன்ஸ் நிறுவனம் லண்டனின் ஸ்டோக் பார்க் பகுதியில் 300 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் வாங்கியது.

    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானி, தனது குடும்பத்துடன் லண்டனுக்கு குடிபெயர்வதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று ரிலையன்ஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் மும்பையின் கம்பாலா ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். ஆன்டிலியா என அழைக்கப்படும் இந்த வீடு 4 லட்சம் சது அடி பரப்பளவு கொண்டது. 27 தளங்களுடன், 173 மீட்டர் உயரம் கொண்ட இந்த வீடு, நில நடுக்கத்தையும் தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் லண்டனின் ஸ்டோக் பார்க் பகுதியில் 300 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் வாங்கியது. இதையடுத்து, அம்பானி தனது குடும்பத்தினருடன் இங்கு குடிபெயர்வார் என நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட, சமூக வலைதளங்களில் தகவல் தீயாக பரவியது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் பலரும் இந்த தகவலை பகிர்ந்திருந்தனர்.

    Also read: வாகன விபத்து இழப்பீடு கோரிக்கைகள் இனி 3 மாதங்களில் செட்டில் – வருடக்கணக்கில் காத்திருப்புக்கு முடிவு!

    தற்போது, இந்த தகவல் குறித்து ரிலையன்ஸ் குழுமம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'முகேஷ் அம்பானி குடும்பத்தினருடன் லண்டன் ஸ்டோக் பார்க்கிற்கு குடிபெயர்வதாக செய்தித் தாளில் தகவல் வெளி வந்துள்ளது. இந்த தகவலுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் லண்டன் அல்லது உலகின் வேறு எங்கு சென்றும் குடிபெயரும் திட்டம் இல்லை. லண்டனில் ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை ரிலையன்ஸ் குழுமம் சமீபத்தில் வாங்கியது. இங்கு கோல்ப் மைதானம் மற்றும் பல விளையாட்டுகளை உள்ளடக்கிய ரிசார்ட் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இவை அனைத்தும் லண்டன் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்படுத்தப்படும். ' என்று கூறப்பட்டுள்ளது.
    Published by:Abdul Mushtak
    First published:

    Tags: Mukesh ambani, Reliance

    அடுத்த செய்தி