உத்தராகண்டை கடவுளின் டிஜிட்டல் தேசமாக மாற்றுவோம்: முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி
- News18
- Last Updated: October 7, 2018, 8:06 PM IST
'புனித தேசமான உத்தராகண்டை, கடவுளின் டிஜிட்டல் தேசமாக ஜியோ மாற்றி அமைக்கும்' என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் இன்று தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது மாநாடு வெற்றிபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியை உத்தராகண்டில் ஏற்படுத்த ரிலையன்ஸ் குழுமம் விரும்புவதாகவும் கூறினார்.
அப்போது, அவர் மேலும் கூறியதாவது: உத்தராகண்டிலுள்ள 2,185 அரசுப் பள்ளிகள், 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் என சுமார் 2,385 கல்வி நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அதிவேக இணையதள சேவை மூலம் இணைக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த இலக்கு எட்டப்படும். உத்தராகண்டில் ரிலையன்ஸ் குழுமம் சார்பில் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 4,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் முகேஷ் அம்பானி.
உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் இன்று தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் முகேஷ் அம்பானி காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது மாநாடு வெற்றிபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியை உத்தராகண்டில் ஏற்படுத்த ரிலையன்ஸ் குழுமம் விரும்புவதாகவும் கூறினார்.
அப்போது, அவர் மேலும் கூறியதாவது: உத்தராகண்டிலுள்ள 2,185 அரசுப் பள்ளிகள், 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் என சுமார் 2,385 கல்வி நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அதிவேக இணையதள சேவை மூலம் இணைக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த இலக்கு எட்டப்படும்.