ஹோம் /நியூஸ் /இந்தியா /

இனி ஸ்பீடு அள்ளும்! நாளை முதல் .. 4 நகரங்கள்.. களம் இறங்குகிறது ஜியோ 5ஜி!

இனி ஸ்பீடு அள்ளும்! நாளை முதல் .. 4 நகரங்கள்.. களம் இறங்குகிறது ஜியோ 5ஜி!

ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் போது வாங்கிய 5G ஸ்பெக்ட்ரம் கலவையை ஜியோ பயன்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

    தசரா விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது True 5G சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அக்டோபர் 5 முதல் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய 4 நகரங்களில் தொடங்கப்படவுள்ளது.

    இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜியோவின் True 5G பீட்டா சேவை, ஜியோ சிம் பயன்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும். இதன் வேகம் 1 ஜிபிபிஎஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    5ஜி சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை எனவும் ஏற்கனவே மக்கள் வைத்திருக்கும் மொபைல்களிலேயே ஜியோ 5ஜியை இயக்க ஃபோன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஜியோ நிறுவனம் பணியாற்றி வருகிறது.

    “5G இண்டெர்நெட், பெரிய நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமான சேவையாக இருக்கக் கூடாது. அது இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனிற்கும் கிடைக்க வேண்டும்" என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி கூறினார்.

    ஜியோவின் 5G சேவை மற்ற நிறுவனங்களை விட மூன்று மடங்கு திறன்மிக்கது. ஏற்கனவே இருக்கும் 4ஜி கட்டமைப்பை பயன்படுத்தாமல் தனித்த கட்டமைப்பை கொண்டது, 5ஜி குரல் அம்சம் மற்றும் நெட்வொர்க் ஸ்லைசிங் ஆகியவற்றை சிறப்பம்சங்கள் கொண்டது.

    இதையும் வாசிக்க: அசத்தும் இந்தியா! இலகுரக பிரச்சந்த் ஹெலிகாப்டரின் சிறப்புகள்....பிரம்மிக்க வைக்கும் படங்கள்..

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் போது வாங்கிய 5G ஸ்பெக்ட்ரம் கலவையை ஜியோ பயன்படுத்தியுள்ளது. சிறந்த உட்புற 5G கவரேஜை உறுதியளிக்கும் 700 MHz லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரம் கொண்ட ஒரே ஆபரேட்டர் ஜியோ ஆகும்.

    ஏர்டெல் 5ஜி ஏற்கனவே 8 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகளை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: 5G technology, Dussera, Jio