முகப்பு /செய்தி /இந்தியா / தங்கள் நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தடுப்பூசி செலவை ஏற்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்..

தங்கள் நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தடுப்பூசி செலவை ஏற்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்..

கோப்பு படம்

கோப்பு படம்

ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 6 லட்சம்.  பணியாளர்களின் குடும்பத்தினரையும் சேர்த்து,  1.9 மில்லியன் மக்களுக்கும் தடுப்பூசி செலவை ஏற்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.

  • Last Updated :

ரிலையன்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தடுப்பூசி விலையை ஏற்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 6 லட்சம்.  பணியாளர்களின் குடும்பத்தினரையும் சேர்த்து,  1.9 மில்லியன் மக்களுக்கும் தடுப்பூசி செலவை ஏற்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.

நாடு முழுவதும் கொரோனா முன்கள சுகாதார பணியாளர்களுக்கு , கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி, ஜனவரி 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டாவது கட்டமாக, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், 45 வயதுக்கு மேலான இணை நோயால் பாதிப்படைந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் அறிவிப்பு

தற்போது  ரிலையன்ஸ் நிறுவனம், தங்கள் பணியாளர்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரிலையன்ஸ் நிறுவனம் உங்களுக்கும், உங்கள் துணைக்கும், குழந்தைகளுக்கும், பெற்றோருக்குமான தடுப்பூசி செலவை ஏற்கிறது. உங்கள் குடும்பத்தின் நலன் எங்களின் பொறுப்பாகும். தங்கள் குடும்பத்தின் நலன் மற்றும் மகிழ்ச்சியில் நாங்கள் மகிழ்கிறோம். நீங்கள் ரிலையன்ஸ் குடும்பத்தின்  ஒரு பகுதி” எனத் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Corona Vaccine, Corona virus, Covid-19 vaccine, Reliance