இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஸிஜன் உற்பத்தியாளரான ரிலையன்ஸ்!

இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஸிஜன் உற்பத்தியாளரான ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ்

ஒரே இடத்தில் அதிக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியில் இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தியாளராக மாறியிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்

  • Share this:
ஒரே இடத்தில் அதிக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியில் இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தியாளராக மாறியிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சாதனை அளவாக இன்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகிவருவதால் உயிர்காக்கும் சிகிச்சைக்கு உதவக்கூடிய மருத்துவ ஆக்ஸிஜனுக்கு மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜனுக்காக மக்கள் காலி சிலிண்டர்களுடன் வரிசையில் காத்திருக்கும் அவலம் நம் கண் முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஈடுபட வேண்டுமென மத்திய அரசு வேண்டுகோள் வைத்தது. எந்த நிறுவனங்களால் ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ள முடியுமோ அந்நிறுவனங்கள் எல்லாம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஈடுபட்டு, உற்பத்தியை பெருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதனையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கியது. தொடங்கிய கையோடு உற்பத்தியையும் அதிகரித்துள்ளது.

ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 1000 டன் லிக்விட் ஆக்ஸிஜனை தயாரித்து இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். தனிப்பட்ட அக்கறையுடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கடி சென்று ஆக்ஸிஜன் உற்பத்தியை கண்காணித்து அங்கு பணியில் ஈடுபட்டுள்ளவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.

ஜாம்நகர் மையத்தில் மட்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 15,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்கப்பட்டு இலவசமாக விநியோகம் செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம், இதன் மூலம் சுமார் 15 லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவி கிடைத்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆக்ஸிஜன் தயாரிப்பு: உச்சநீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பாராட்டு!


உச்சநீதிமன்றத்தில் நேற்று ஆக்ஸிஜன் சப்ளை குறித்தான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, குஜராத்தின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் லிக்விட் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிப்பை தொடங்கியதுடன் தயாரிப்பை 700 மெட்ரிக் டன்னாக அதிகப்படுத்தியதற்காக உச்சநீதிமன்றம் ரிலையன்ஸ் நிறுவனம் நிறுவனம் பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸிஜன் கண்டெய்னர்


இது தவிர சவுதி அரேபியா, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் தாய்லாந்தில் இருந்து ஆக்ஸிஜன் பயன்பாட்டிற்காக 24 ஐஎஸ்ஓ கண்டெய்னர்களை ஏற்பாடு செய்து இந்தியாவிற்கு கொண்டு வர உதவியுள்ளது. இந்த கண்டெய்னர்கள் மூலம் கூடுதலாக 500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சப்ளை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. வரும் நாட்களில் கூடுதல் கண்டெய்னர்களையும் இந்தியாவிற்கு ரிலையன்ஸ் நிறுவனம் வரவழைக்க உள்ளது. இந்த கண்டெய்னர்கள் இந்திய விமானப்படையின் விமானங்கள் உதவியுடன் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: