உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், 3 நாட்கள் நடைபெறுகின்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் பேசிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் பிராந்திய ஏற்ற தாழ்வு வேகமாக மறைவதாகவும், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறைவதாகவும் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 நாட்கள் நடைபெறுகின்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இதில் பலவேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் பிராந்தியங்களின் ஏற்ற தாழ்வு மறைவதாகவும், அதற்கு உத்திர பிரதேசம் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகவும் கூறினார். மேலும் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளி மறைந்து வருவதாகக் கூறினார்.
தொடர்ந்து, இந்தியா மிகவும் பலமான முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லுகின்றது என்றதில் மிகவும் உறுதியாக இருப்பதாகவும், அதற்கு முக்கிய காரணங்களாகத் தொழில்நுட்ப வளர்ச்சி, அதிக இளைஞர்களின் தொகை, பிராந்திய ஒற்றுமை மற்றும் மக்களின் நம்பிக்கை என்ற நான்கு அம்சங்கள் என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார். அதிவேக 5ஜி இணையச் சேவைத் தொடக்கத்தினால் உலகளவில் இந்தியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை அடைகின்றனர் என்றும் இந்திய இளைஞர்கள் தொழில் முயற்சி, ஆற்றல், திறமை போன்றவற்றில் உலகையே உலுக்குவதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து மத்திய பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், மத்திய பட்ஜெட் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் மேலும் முன்னெடுத்துச் செல்வதாகவும், மூலதன செலவுகளுக்கு 33 சதவீதம் அதாவது ரூ.10 லட்சம் வரை ஒதுக்கி முன்னேற்றப் பாதையை நோக்கி நகர்வதாகக் கூறியுள்ளார்.
இறுதியாக, உத்திர பிரதேச மாநிலத்தில் ஜியோ நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளின் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாகவும் கூறியுள்ளார். 2023 டிசம்பர் மாதத்திற்குள் உத்திர பிரதேசத்தின் அனைத்து கிராமங்கள், நகரங்களுக்கும் ஜியோவின் அதிவேக 5 ஜி சேவை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mukesh ambani, Reliance, Uttar pradesh