ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி விசாகப்பட்டினத்திற்கு வருகை தந்துள்ளார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாநாட்டிற்கு வருகை தந்த முகேஷ் அம்பானியை வரவேற்றார்.
ஆந்திராவில் உள்ள தொழில்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வண்ணம் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொடக்க விழாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இதனையடுத்து மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்துள்ளார்.
Also Read : பாஜக - காங்கிரஸ் கள்ளஉறவு.. 2024 தேர்தலில் தனித்துப்போட்டி.. மம்தா பானர்ஜி அதிரடி!
இந்த நிகழ்ச்சியில் 40 நாடுகளில் இருந்து சுமார் 8,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக விசாகப்பட்டினத்தில் பலத்த பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.