• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் ஷாப்பிங் மால் திறப்பு.. ஓபன் தியேட்டர் உள்ளிட்ட பிரம்மிக்க வைக்கும் வசதிகள்..

ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் ஷாப்பிங் மால் திறப்பு.. ஓபன் தியேட்டர் உள்ளிட்ட பிரம்மிக்க வைக்கும் வசதிகள்..

Jio world drive

Jio world drive

உலக அளவில் பிரபலமான உணவு வகைகளைக் கொண்ட 27 உணவகங்கள் இந்த மாலில் உள்ளன. மும்பையின் முதல் ரூப் டாப் திரையரங்கமும் உள்ளது.

  • Share this:
இந்தியாவின் முதல் ரூஃப் டாப் ஓபன் தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு முதல் முறை அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் ஷாப்பிங் மால் திறக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மும்பையின் வர்த்தக மையமாக திகழும் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உயர்தர சில்லரை வர்த்தக மையமான ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் ஷாப்பிங் மால் 17.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாலில் பொழுதுபோக்கு, உணவு, சில்லரை வர்த்தகம், கலை போன்றவற்றில் இதுவரை இந்தியாவில் இல்லாத அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இந்த மால் பொதுமக்களை அதிகம் கவர்ந்திழுக்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது.

ரூஃப் டாப் டிரைவ் இன் தியேட்டர்:

உலக அளவில் பிரபலமான உணவு வகைகளைக் கொண்ட 27 உணவகங்கள் இந்த மாலில் உள்ளன. மும்பையின் முதல் ரூப் டாப் திரையரங்கமும் உள்ளது. ஜியோ டிரைவ்-இன் தியேட்டர் என்றழைக்கப்படும் இது ரூஃப் டாப் உடன் கூடிய டிரைவ் இன் திறந்தவெளி தியேட்டர் ஆகும். மும்பையின் மிகப்பெரிய திரையை கொண்டிருக்கும் இங்கு ஒரே நேரத்தில் 290 கார்களை நிறுத்த முடியும். பிவிஆர் நிறுவனத்தால் இந்த தியேட்டர் இயக்கப்படும். இந்த தியேட்டர் மட்டும் நவம்பர் 5ம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

Also read:   தனுஷ் பட கேங்க்ஸ்டர் நடிகரின் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸ் தொண்டர்கள்.. முக்கிய சாலையில் பரபரப்பு…

உலகளாவிய உணவு வகைகள்:

ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் மாலில், Nine Dine, Motodo என உலகப் புகழ்பெற்ற உணவகங்கள் உள்ளன. இவை தவிர See saw என்ற புத்தம் புதிய உணவகம் ஒன்று பிரபல சமையல்கலை வல்லுனரான அதிதி துகாரின் பங்களிப்புடன் தொடங்கப்படுகிறது. உலகின் மிகச்சிறந்த உணவுகளை ஒரே இடத்தில் கொண்டு வந்து தரும் இந்த உணவகத்தில் பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளையும் அழைத்து வரலாம். பொதுமக்களுக்கும், அவர்களின் செல்லப்பிராணிகளுக்கும் இங்கு உணவு பரிமாறப்படும் என்பது தனிச்சிறப்பு.

தனியார் உறுப்பினர்கள் கிளப்:

இந்த மாலில் ‘தி பே கிளப்’ என்ற தனியார் கிளப் ஒன்று பல்வேறு வசதிகளுடன் தொடங்கப்படுகிறது. நகரத்திலேயே சிறந்த விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் வாழ்க்கை முறை வசதிகளை தரக்கூடிய இது புது அனுபவத்தை தருவதாக அமையும்.

Also read:  சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாத பெற்றோர்கள்.. மூடநம்பிக்கையால் பறிபோன சிறுமியின் உயிர்..

கலை:

ஃப்ரெஞ்ச் மாடலான நிஏஜ் மாடலில் மிகவும் பிரபலமான ரோஸ் போன்த்ரோன் மற்றும் ஆன்டி லம்பார்டால் இந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மால் வளாகத்துக்குள் பலதரப்பட்ட இந்தியா மற்றும் சர்வதேச கலைப்படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

Isha Ambani


ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் இயக்குனரான ஈஷா அம்பானி இந்த மால் குறித்து கூறுகையில், “நவீன கால வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்வதை உணர்வுபூர்வமாக செழுமைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதே ரிலையன்ஸ் மால். ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள சிறப்பான சில்லரை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை மும்பைக்கு கொண்டுவந்திருக்கிறோம். இது வெறும் ஒரு பிராண்டு அல்லது இடம் மட்டுமல்ல, இதுவரை பார்த்திராத, அனுபவித்திராத ஒரு உலகளாவிய தனிமனித அனுபவத்தை இங்கு பெறமுடியும்.” என தெரிவித்தார்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: