இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை புரட்டிப் போட்டுள்ளது. கொரோனா முதல் அலையை சமாளித்து இந்தியா எழுந்து நிற்கும்போது இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தியது. இரண்டாது அலையில் எந்த உலக நாடுகளிலும் இல்லாத அளவுக்கு நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு மெல்லமாக குறைந்துவருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாக உள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து இந்தியா இன்னமும் மீளாத நிலையில் மூன்றாவது அலைக்கான எச்சரிக்கைவிடுக்கப்படுகிறது.
மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளைத் தாக்கும் என்று எச்சரிக்கப்படுத்துள்ளது. அதனால், மூன்றாவது அலைக்கு இப்போது இந்தியா தயாராகத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும்காலங்களில் ஏற்படவுள்ள கொரோனா பாதிப்புக்காக, மும்பையிலுள்ள எச்.என்.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு சிகிச்சையளிப்பதற்கான தயாரிப்புகள் மகாராஷ்டிரா அரசின் உதவியுடன் தொடங்கியுள்ளது.
குழந்தைகள் மற்றும் இளம்பருத்தினருக்கு அதிகரிக்கும் கொரோனா பாதிப்புக்காக குழந்தைகள் பராமரிப்புக்கு ரிலையன்ஸ் மருத்துவமனை கவனம் செலுத்தியுள்ளது. ஓர்லி பகுதியிலுள்ள தேசிய விளையாட்டு மையத்தில் கொரோனா சிகிச்சைக்காக 650 படுக்கைகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை நிர்வகித்துவருகிறது. அந்த 650 படுக்கைகளில் 100 படுக்கைகள் குழந்தைகளுக்கான அறிகுறியற்ற பாதிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 20 படுக்கைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான வெண்டிலேட்டர்கள், மானிட்டர்கள், ஆக்ஸிஜன் வசதி, டயாலிஸிஸ் வசதிகளுடன் இருக்கின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என 500 முன்களப் பணியாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பணியில் உள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீடா அம்பானி, ‘கொரோனா பாதிப்பால் ஆழ்ந்த வலி, இழப்பு மற்றும் வேதனையில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் மக்கள் பற்றி எங்கள் மனம் சிந்திக்கிறது. கொரோனா பாதிப்புச் சூழலில் இந்தியாவுக்கு எங்களால் என்னென்ன செய்யமுடியுமோ அதனை நாங்கள் தொடர்ந்து செய்வோம். கொரோனா பாதிக்கும் சூழலைக் கருத்திக்கொண்டு இளம்பருவத்தினர் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு சிகிச்சைக்கான வசதிகளை அதிகரித்துவருகிறோம். ரிலையன்ஸ் அறக்கட்டளை தொடர்ந்து படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கும். நாம் இணைந்து இந்த சவலான சூழலிருந்து மீண்டு வருவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Reliance Foundation