கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு ரிலையன்ஸ் பவுன்டேஷன் ரூ.25 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. இதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெள்ள பாதிப்பால் தற்போது கடும் அவதிக்குள்ளாகியிருக்கும் அசாம் மாநில மக்களுக்காக ரிலையன்ஸ் குழுமம் ரூ.25 கோடி வழங்கியுள்ளது. மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரிலையன்ஸ் குழுமத்திற்கு மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலமாக ரிலையன்ஸ் குழுமத்தினர் அசாம் மாநில அரசு மற்ற சமூக அமைப்புகளுடன் இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவிகளை செய்து வருகின்றனர்.
ரிலையன்ஸ் குழுமத்திற்கு வெள்ள பாதிப்பு குறித்த தகவல் கிடைத்த உடனே, அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய சுகாதார ஆணையம், கால்நடைத்துறை, மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் ஏனைய சிவில் குழுக்களுடன் இணைந்து உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
கச்சார் மாவட்டத்தின் சில்சார், காலின், போர்கோலா மற்றும் கதிகோரா ஆகிய பகுதிகளிலும், நகோவான் மாவட்டத்தின் காதியதோலி, ராஹா, நகோவன் சர்தார், காம்பூர் ஆகிய பகுதிகளில் ரிலையன்ஸ் குழுமம் மீட்புப் பணி மற்றும் உதவிகளை செய்தது.மேற்கண்ட மாவட்டங்களில் அவசர தேவைக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கியும் பல இடங்களில் கால்நடை பராமரிப்பு மையங்களை அமைத்து தந்துள்ளது, ஜூன் 1ஆம் தேதி முதல் சுமார் 1,900 மக்களுக்கும் 10,400 கால்நடைகளுக்கும் சுகாதார மையங்களில் மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிதி ஆயோக் CEO ஆக தூய்மை இந்தியா திட்டத்தின் மூளையாக இருந்த பரமேஸ்வரன் நியமனம்
மேலும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு மருத்துவ உதவிகளுடன் ரேஷன் பொருள்களையும் விநியோகம் செய்துள்ளது. இதுவரை சுமார் 5,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு, அசாம் மாநிலத்தில் எட்டு முறை கனமழை சார்ந்த பேரிடர் ஏற்பட்ட போது, சுமார் 1.7 லட்சம் மக்களுக்கு ரியைலன்ஸ் குழுமம் உதவி செய்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Reliance Foundation