உலக புற்றுநோய் தினம் : ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி நிறுவியுள்ள ‘One Stop Breast Clinic'..

நீடா அம்பானி

பெண்கள் அதிக அளவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் இச்சூழலில், மார்பகம் தொடர்பான நோய்கள் மற்றும் அசெளகரியங்களுக்கு கண்டறிதலை இரண்டு மணி நேரத்துக்குள்ளாக செய்வதற்கான மையமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  நேற்று உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவரான நீடா அம்பானி, Sir HN ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் மார்பகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்குமான One stop Breast Clinic-ஐ நிறுவியுள்ளார். பெண்கள் அதிக அளவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் இச்சூழலில், மார்பகம் தொடர்பான நோய்கள் மற்றும் அசெளகரியங்களுக்கு கண்டறிதலை இரண்டு மணி நேரத்துக்குள்ளாக செய்வதற்கான மையமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  One stop Breast Clinic-ஐ தொடங்கி வைத்து பேசிய ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, “ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவான விலையில் உலகத்தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்னும் தொலைநோக்கு பார்வையுடன் இது தொடங்கப்பட்டுள்ளது. ஒரு இந்தியக் குடிமகளாகவும், பெண்ணாகவும் மார்பகப் பிரச்சனைகளுக்கான இந்த க்ளினிக்கைத் தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  பெண்களின் நற்குணங்களைப் பட்டியலிட்ட நீடா அம்பானி, ”பெண்கள் பல வேலைகளை ஒரே ஆளாக செய்து வருகிறார்கள். குடும்பம், குழந்தை வளர்ப்பு, அலுவலகம், நிதி மேலாண்மை என அனைத்தையும் செய்துவருவதில் தங்களைக் குறித்தும், உடல்நலத்தைக் குறித்தும் மறந்துவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்றியாக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

  இந்த க்ளினிக் மற்றுமொரு புற்றுநோயியல் துறையாக மட்டுமின்றி, புற்றுநோய் பாதித்தவர்களுக்கான மறுவாழ்வுக்கான மையமாகவும் செயல்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  நிகழ்வில் பேசியபோது, ”புற்றுநோய் தடுப்பு, விரைவான கண்டறிதல், சிகிச்சை திட்டமிடல், ஆலோசனை மையம், மறுவாழ்வு ஆலோசனைகள், மறுவாழ்வு மையம் மற்றும் பராமரிப்புச் சேவைகள் என ஒரே கூரைக்கு கீழ் பல சேவைகளை அளிக்கும் மையமாக One stop breast Clinic செயல்படும்” என மருத்துவர் ஜியன்சந்தானி தெரிவித்தார்.

  உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகத்தின் கூற்றின்படி, ‘உலகளவில் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.அதில் 14% பேர் இந்தியப் பெண்களாக இருக்கிறார்கள்” என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Gunavathy
  First published: