ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் சர்வதேச வளர்ச்சிகான அமெரிக்கா நிறுவனம் தொடங்கிய இந்தியப் பெண்கள் இணைப்பு சவால் என்ற முன்னெடுப்பில் இந்தியா முழுவதுமுள்ள 10 நிறுவனங்கள் தேர்வாகியுள்ளளன. இந்த முன்னெப்பின் டிஜிட்டல் பயன்பாட்டில் பாலின இடைவெளியை குறைப்பதற்கு 11 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வுகளைச் சொல்லும் திட்டங்களுக்கான அந்த 11 கோடி ரூபாயில் ரிலையன்ஸ் நிறுவனம் 8.5 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
தொழில்நுட்பத்தின் மூலம் பெண்களை பொருளாதார ரீதியில் உயர்த்துதல் மற்றும் டிஜிட்டல் பாலினப் பாகுபாட்டை அடைப்பதற்கான இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதுமுள்ள 17 மாநிலங்களிலிருந்து 3 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்.
இதுகுறித்து தெரிவித்த ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி, ‘பெண்கள் அவர்களது வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. நாங்கள் ஜியோவை அறிமுகப்படுத்தியபோது இந்த டிஜிட்டல் புரட்சி சமமான வாய்ப்புகளாக இருக்கவேண்டும் என்று நாங்கள் கற்பனை செய்தோம்.
ஜியோவின் மூலமாக நாடு முழுவதும் எளிமையான முறையில் இணைப்பை உருவாக்கியுள்ளோம். இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டில் பாலின இடைவெளியை குறைப்பதற்கு பாலமாக இருக்கும் வகையில் யு.எஸ்.ஏ.ஐ.டியுடன் இணைந்து ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்படுகிறது. தொழில்நுட்பம் என்பது வலிமையானது என்றால் அது சமத்துவமின்மையை இல்லாமல் செய்யவேண்டும். இந்தியாவில் பெண்கள் இணைப்பு சவாலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களை இந்தப் பயணத்துக்கு வரவேற்கிறேன்’ என்று தெரிவித்தார்.
தேர்வு செய்யப்பட்டுள்ள 10 நிறுவனங்கள்:
அனுதிப் அறக்கட்டளை
பேர்ஃபூட் சர்வதேசக் கல்லூரி,
இளைஞர்களுக்கான மையம் மற்றும் சமூக முன்னேற்றம்
பெண்களுக்கான சர்வதேச வங்கிகளின் நண்பர்கள்
நாண்டி அறக்கட்டளை
வளர்ச்சி நடவடிக்கைக்கான உதவிகள்
மாற்று வளர்ச்சிக்கான சமூகம்
சாலிடாரிடாட் பிராந்திய நிபுணத்துவ மையம்
டி.என்.எஸ் இந்தியா அறக்கட்டளை
இசட்.எம்.கியூ வளர்ச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nita Ambani, Reliance Foundation