முகப்பு /செய்தி /இந்தியா / சர்வதேச பெண்கள் முன்னேற்ற அமைப்புடன் ரிலையன்ஸ் அறக்கட்டளை புதிய ஒப்பந்தம்

சர்வதேச பெண்கள் முன்னேற்ற அமைப்புடன் ரிலையன்ஸ் அறக்கட்டளை புதிய ஒப்பந்தம்

நிடா அம்பானி

நிடா அம்பானி

பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் சர்வதேச பெண்கள் முன்னேற்ற அமைப்புடன் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :

ரிலையன்ஸ் அறக்கட்டளையானது இந்தியாவில் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கு பல வழிகளிலும் உதவியாக உள்ளது.

இந்த நிலையில், பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் சர்வதேச பெண்கள் முன்னேற்ற அமைப்புடன் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது

இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்திற்கும் தொழில் வாய்ப்புக்கும் இந்தத் திட்டம் உறுதுணையாக இருக்கும். அமெரிக்க சர்வதேச வளர்ச்சி மையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் இந்தியா முழுவதும் பெண்களின் வளர்ச்சிக்கு துணை நிற்க முடியும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

திட்டத்தின் மூலம் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்துவது தான் முக்கிய நோக்கம் என்று அமெரிக்க அதிபரின் ஆலோசகரான இவாங்கா டிரம்ப் தெரிவித்துள்ளார்

First published:

Tags: Reliance Foundation