சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமான ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் 10 லட்சத்துக்கும் மேலான ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், கூட்டாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ரிலையன்ஸ் அறக்கட்டளை தனது தடுப்பூசி செலுத்தும் பணியை ஏப்ரல் மாதம் தொடங்கியது.
ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கூட்டாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தற்போது, 98 சதவிதத்துக்கும் மேலான தகுதியான ஊழியர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மூலம் நலிந்த பிரிவு மக்களுக்குக்கும் கூடுதலாக 10 லட்சம் தடுப்பூசிகள்செலுத்தப்பட்டுள்ளன.
இலவச கார்ப்பரேட் தடுப்பூசி திட்டத்தில் இது மிகப் பெரியது ஆகும்.
அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது இந்தியாவின் முதன்மை தேவையாக உள்ளது. தற்போதைய சூழலை எதிர்த்து போராடவும் இது வழியாக உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
“ இந்த திட்டத்தை நாடு தழுவிய அளவில் நிறைவேற்றுவது என்பது மகத்தான பணியாகும். ஆனால் ஒவ்வொரு இந்தியனுக்கு பாதுகாப்பு குறித்து உறுதி செய்வது எங்களின் தர்மம்,எங்களின் கடமை. நாம் ஒன்றினைத்து இதில் இருந்து வெளிவருவோம் என்றும் நாம் உறுதியாக நம்புகிறேன்’ என்று திருமதி நீதா அம்பானி கூறியிருந்தார்.
தடுப்பூசி சுரக்ஷா திட்டத்தின் கீழ், இதுவரை 10 லட்சத்துக்கு மேலான தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்டு விட்டன. நாடு முழுவதும் 171 தடுப்பூசி முகாம் மூலம் ஊழியர்கள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், கூட்டாளிகள்,கூட்டு நிறுவன கூட்டாளிகள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் தலா 8 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
தற்போது, ஆலைகளின் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், பொதுமக்கள் ஆகியோருக்கும் தொண்டு நிறுவனங்கள் மூலம் கூடுதலாக 10 லட்சம் தடுப்பூசிகள் வழங்கும் விதமாக இந்த திட்டம் விரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று மூலம், தனது ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்கும் தனது சமூக பொறுப்பில் ரிலையன்ஸ் அறக்கட்டளை உறுதியாக உள்ளது.
தினசரி ஒருலட்சம் நோயாளிகள் தேவையை சமாளிக்கும் விதமாக இலவச ஆக்சிஜன் வழங்குவது, நாடு முழுவதும் 2,000 க்கும் மேற்பட்ட கோவிட் பராமரிப்பு படுக்கைகள் மற்றும் வசதிகள், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நலிவு அடைந்த 7.5 கோடி மக்களுக்கு உணவு வழங்குதல், முன்களப் பணியாளர்கள், தினக்கூலிகள், போக்குவரத்து ஊழியர்கள் மற்று பிறர்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான முகக்கவசம் வழங்குதல் போன்றவையும் இந்த முயற்சி உள்ளடக்கியுள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சமூக பொறுப்புணர்வு செலவினங்களில் ரிலையன்ஸ் கணிசமான 4 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Corona Vaccine, Reliance, Reliance Foundation, Sanjeevani