• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியே தேசிய மொழி.. சோமேட்டோவை தொடர்ந்து, மொழி சர்ச்சையில் சிக்கிய கேஎஃப்சி!!

இந்தியே தேசிய மொழி.. சோமேட்டோவை தொடர்ந்து, மொழி சர்ச்சையில் சிக்கிய கேஎஃப்சி!!

இந்தியே தேசிய மொழி.. சோமேட்டோவை தொடர்ந்து, மொழி சர்ச்சையில் சிக்கிய கேஎஃப்சி!!

இந்தியே தேசிய மொழி.. சோமேட்டோவை தொடர்ந்து, மொழி சர்ச்சையில் சிக்கிய கேஎஃப்சி!!

இந்தியாவின் தேசிய மொழி இந்தி தான் என கூறிய கே.எஃப்.சி. ஊழியருக்கு கண்டனம் தெரிவித்து #RejectKFC என்ற ஹேஷ்டேக்கை கன்னடர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  • Share this:
    நாட்டின் தேசிய மொழி இந்தி என்ற கருத்தை மற்ற மொழியினர் மீது திணித்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்த இந்தி திணிப்பு கருத்தில் இருந்து தென்இந்தியா எப்போதுமே மாற்று கருத்துடன் தனித்து நிற்கிறது.

    முன்னதாக, தமிழகத்தை சேர்ந்த வாடிக்கையாளரிடம் சோமேட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் இந்தியே இந்தியாவின் தேசிய மொழி என தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக #RejectZomato என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

    இதையடுத்து, நடந்த சம்பவத்திற்கு சோமேட்டோ மன்னிப்பு கோரியது. மேலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம்தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம் என்று தெரிவித்திருந்தது.

    பின்னர் சிறிது நேரத்தில், இந்த ஒரு காரணத்திற்காக ஊழியரை பணியிலிருந்து நீக்குவது ஏற்புடையதல்ல என்று சோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்திருந்தார். மேலும் அவர், உணவு விநியோக நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள ஒருவர் அறியாமல் செய்த தவறு தேசிய பிரச்னையாக மாறியிருக்கிறது.

    நாட்டின் சகிப்புத்தன்மை என்பது தற்போது இருப்பதைவிட அதிகரிக்க வேண்டும். யாரை குறைக்கூறுவது?. அதேபோல அந்த பணியாளரை நாங்கள் மீண்டும் பணியமர்த்துவோம். இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியிலிருந்து நீக்குவது ஏற்புடையதல்ல. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல அவருக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

    இந்நிலையில், தற்போது சோமேட்டோவை தொடர்ந்து, மொழி சர்ச்சையில் கேஎஃப்சி சிக்கியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கே.எஃப்.சி. விற்பனை மையம் ஒன்றில் இந்தி பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இந்தி பாடல் ஒலிபரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு கர்நாடகாவில் உள்ள உணவு மையம் என்பதால் கன்னட பாடலை ஒலிபரப்புமாறும் இல்லையென்றால், பாடலை நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.

    இதனை ஏற்க மறுத்த கே.எஃப்.சி நிறுவன ஊழியர், இந்தியே இந்தியாவின் தேசிய மொழி என்று அந்த பெண்ணுக்கு பதில் தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து கே.எஃப்.சி. நிறுவன ஊழியரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

    இதனை கண்டித்து #RejectKFC என்ற ஹேஷ்டேக்கை கன்னடர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: