முகப்பு /செய்தி /இந்தியா / சில முடிவுகள் முதலில் நியாயமற்றதாக தோன்றலாம்..பின்னாளில் தேசத்தை கட்டியெழுப்ப அவை உதவும்: அக்னிபத் குறித்து மோடி பேச்சு

சில முடிவுகள் முதலில் நியாயமற்றதாக தோன்றலாம்..பின்னாளில் தேசத்தை கட்டியெழுப்ப அவை உதவும்: அக்னிபத் குறித்து மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

agnipath: நான்கு வருட சேவைக்குப் பின் நாங்கள் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பிய இளைஞர்களுக்கு ஆயுதப்படை, துணை ராணுவப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதாக அரசு சார்பில் உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

    சில முடிவுகள் முதலில் "நியாயமற்றதாக" தோன்றலாம், ஆனால் பின்னாளில் அவை தேசத்தை கட்டியெழுப்ப உதவும் என அக்னிபத் திட்டம் பற்றி பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

    அக்னிபத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான ஜூன் 14 முதல் நாடு முழுக்கப் போராட்டங்கள் வெடித்தன. பல இடங்களில் வன்முறை வெடித்த நிலையில், ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டங்களால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. உத்தரப் பிரதேசம், பிகார், தெலங்கானாவில் பெரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

    நான்கு வருட சேவைக்குப் பின் நாங்கள் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பிய இளைஞர்களுக்கு ஆயுதப்படை, துணை ராணுவப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதாக அரசு சார்பில் உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் போராட்டங்களை நிறுத்தும் விதமாக ராணுவ விவகாரங்கள் துறை சார்பாக கூடுதல் செயலாளர் அனில் பூரி விளக்கம் அளித்தார். .

    இதனிடையே அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவதாகக் கருதி பாஜக தலைவர்கள் சிலர் அவர்கள் பங்கிற்கு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினர். அக்னிபத் வீரர்களுக்கு எலக்ட்ரிஷியன், டிரைவர், முடி திருத்துதல் உள்ளிட்ட வேலைகளுக்கான திறன் பயிற்சி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி சொல்ல, பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா இன்னும் ஒரு படி மேலே சென்று 4 ஆண்டுகள் பணியாற்றி வெளியேறும் வீரர்களை, பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டி பணிக்கு ஆள் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்வோம் என்று கூறி ரணகளப்படுத்தினார்.

    மேலும் படிக்க: அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டம்.. பாதுகாப்பு வளையத்தில் ரயில் நிலையங்கள்

    இந்நிலையில் பெங்களூருவில் விழா ஒன்றில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, சில முடிவுகள் முதலில் "நியாயமற்றதாக" தோன்றலாம், ஆனால் பின்னாளில் அவை தேசத்தை கட்டியெழுப்ப உதவும் என்றார். அப்போதும் அக்னிபத் திட்டத்தின் பெயரை குறிப்பிடாமலேயே மோடி பேசியுள்ள நிலையில், நியாயமற்றதாகத் தோன்றும் முடிவுகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    First published:

    Tags: Agnipath