ஹோம் /நியூஸ் /இந்தியா /

'10 லட்சம் பேர் வாழ்வாதாரம்'.. தீப்பெட்டிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த கனிமொழி!

'10 லட்சம் பேர் வாழ்வாதாரம்'.. தீப்பெட்டிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த கனிமொழி!

கனிமொழி

கனிமொழி

தீப்பெட்டி செய்யப் பயன்படுத்தப்படும் அட்டை விலை கிலோவுக்கு ரூ. 40ல் இருந்து ரூ. 90 ஆக உயர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

தீப்பெட்டி மூலப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி-யை குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

திமுக எம்பி கனிமொழி, தூத்துக்குடி தீப்பெட்டித் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசினார். அப்போது தீப்பெட்டி செய்யப் பயன்படுத்தப்படும் அட்டை விலை கிலோவுக்கு ரூ. 40ல் இருந்து ரூ. 90 ஆகவும் தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் சிவப்பு பாஸ்பரஸ் ஒரு கிலோ விலை ரூ. 1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 10 லட்சம் பேர் பணியாற்றும் தீப்பெட்டி தொழிலை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதாக கூறிய கனிமொழி எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

First published:

Tags: GST, Kanimozhi, Lok sabha