‘தீரமிகு’ காவலர்கள்: குடியரசு தின வன்முறையில் துணிச்சல்: நாடு பெருமையடைவதாக போலீஸாருக்கு அமித் ஷா பாராட்டு

அமித் ஷா

சுஷ்ருதா மருத்துவ மையம் மற்றும் தீரத்ராம் மருத்துவமனைக்கு சென்ற அமித் ஷா, அங்கு சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சந்தித்து, அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

 • Last Updated :
 • Share this:
  டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறையில் தங்களைத் தாக்கியது அடியாட்கள்தான் என்று போலீசாரில் ஒரு தரப்பினர் கூறியுள்ள நிலையில் போலீஸார் காட்டிய துணிச்சலையும், உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமையடைகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

  டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்தவன்முறை சம்பவங்களின் போதுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸாரை மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

  வேளாண்சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசுதினத்தன்று டெல்லியில்டிராக்டர் பேரணி நடத்த முடிவுசெய்யப்பட்டது. டிராக்டர் செல்ல தனியான வழித்தடத்தை டெல்லி போலீஸார் உருவாக்கி இருந்தனர். ஆனால்,விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர்.

  பல போலீசார் காயமடைந்தனர். எப்.ஐ.ஆர்கள் போடப்பட்டுள்ளன, ஆனால் தாங்கள் தாக்கப்பட்டது குண்டர்கள் மற்றும் அடியாட்களால்தானே தவிர எங்களைத் தாக்கியது விவசாயிகள் அல்ல என்று டெல்லி போலீஸாரின் ஒருதரப்பினர் தெரிவித்தது பரபரப்பாகியுள்ளது.

  டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்தவர்கள் தேசியக் கொடிஏற்றும் இடத்தில், சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர். ஆனால் கொடியை ஏற்றியது தீப் சித்து என்ற நபர் என்பதும் இவர் பாஜக ஆள் என்பதும் இவரும் மோடியும் சன்னி தியோலும் ஒன்றாக நிற்கும் புகைப்படங்களும் வெளியாகி வன்முறையில் பாஜக சதி இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளன.

  டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 83 போலீஸார்காயமடைந்தனர் . வன்முறை சம்பவங்களின்போது காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸாரைமத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா சென்று பார்வையிட்டார்.

  சுஷ்ருதா மருத்துவ மையம் மற்றும் தீரத்ராம் மருத்துவமனைக்கு சென்ற அமித் ஷா, அங்கு சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சந்தித்து, அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

  பின்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

  “டெல்லி காவல் துறையின் தீரமிகு காவலர்களை இன்று மருத்துவமனையில் சந்தித்து, அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினேன். குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறையில் அவர்கள் காட்டிய துணிச்சலையும், உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமையடைகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: