பல உயிர்களை காப்பாற்றிய சிகப்பு சிக்னல் – மும்பை விபத்தை நேரில் பார்த்தவர் தகவல்

டிராபிக் சிக்னலில் எரிந்த சிகப்பு விளக்கு தான். அந்த சிகப்பு விளக்கு பச்சை விளக்காக எரிந்திருந்தால், மேலும், பலர் உயிரிழந்திருக்க நேர்ந்திருக்கும் என தனது அனுபவத்தை படபடப்புடன் முகமது அக்தர் அன்சாரி தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: March 15, 2019, 11:37 AM IST
பல உயிர்களை காப்பாற்றிய சிகப்பு சிக்னல் – மும்பை விபத்தை நேரில் பார்த்தவர் தகவல்
டிராபிக் சிக்னலில் எரிந்த சிகப்பு விளக்கு தான். அந்த சிகப்பு விளக்கு பச்சை விளக்காக எரிந்திருந்தால், மேலும், பலர் உயிரிழந்திருக்க நேர்ந்திருக்கும் என தனது அனுபவத்தை படபடப்புடன் முகமது அக்தர் அன்சாரி தெரிவித்தார்.
Web Desk | news18
Updated: March 15, 2019, 11:37 AM IST
மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் உள்ள நடை பாலம் நேற்று மாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 5பேர் உயிரிழந்ததுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் மேலும் பலர் உயிரிழக்காமல், டிராபிக் சிக்னலான சிகப்பு விளக்கு காப்பாற்றியதாக, விபத்து நடந்த இடத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த டாக்ஸி டிரைவர் முகமது அக்தர் அன்சாரி தெரிவித்துள்ளார்.மும்பையின் மிக முக்கியமான ரயில் நிலையமான மும்பை சத்திரபதி ரயில் நிலையத்தில் உள்ள நடை பாலம் நேற்று மாலை 7.30 மணியளவில் திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த போது ஏற்பட்ட புழுதியால், அந்த இடம் சற்று நேரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது.

எனது டாக்ஸியில் பெண் பயணி ஒருவர் சர்ச் கேட்டில் இருந்து மாஹிம் பகுதிக்கு பயணம் செய்தார். திர்ஷ்டவசமாக நாங்கள் உயிர் பிழைத்தோம். அந்த நேரத்தில் அதிகமான கார்கள் பாலத்தின் கீழ் இல்லை.

அதற்கு காரணம் டிராபிக் சிக்னலில் எரிந்த சிகப்பு விளக்கு தான். அந்த சிகப்பு விளக்கு பச்சை விளக்காக எரிந்திருந்தால், மேலும், பலர் உயிரிழந்திருக்க நேர்ந்திருக்கும் என தனது அனுபவத்தை படபடப்புடன் முகமது அக்தர் அன்சாரி தெரிவித்தார்.
Loading...
பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் சிக்கிய 23வயது இளைஞர் ராஜேஷ் தாஸின் வலது கையில் பலமான அடிபட்டிருந்தது. சம்பவம் குறித்து தெரிவித்த அவர், ”நான் ஜாவேரி பஜாரில் வேலை பார்க்கிறேன். 7.30 மணிக்கு சொந்த ஊருக்கு செல்ல கொல்கத்தாவில் ரயில் ஏற செல்லும் போது, எதிர்பாராதவிதமாக பலத்த சத்தத்துடன் நடைபாலம் இடிந்து விபத்துக்குள்ளானது. எனக்கு எதிரில், மூன்று பெண்கள் சுயநினைவில்லாமல் விழுந்து கிடந்தனர், அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி செல்வதை பார்த்தேன்” என்றார்.

அபூர்வா பிரபு(35), ராஞ்சனா டாம்பே(40), ஜாகித் சிராஜ் கான்(32), பக்தி ஷிண்டே(40) மற்றும் தாபேந்திர சிங்(35) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

Also See:
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...