கர்நாடகா, கேரளாவில் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை!

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 86-க அதிகரித்துள்ளது.

news18
Updated: August 10, 2019, 7:13 AM IST
கர்நாடகா, கேரளாவில் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை!
வடமாநிலங்களில் கனமழை பெய்துவருவதால் வீடுகள், சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. (Image: PTI)
news18
Updated: August 10, 2019, 7:13 AM IST
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வயநாட்டில் பல்வேறு இடங்களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலப்புரம் மாவட்டத்தில் நிலச்சரிவால் காணாமல் போன 30 பேரை தேடும் பணி தொடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மழை, வெள்ள பாதிப்புகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.


கொச்சி விமானநிலையத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் நாளை வரை விமான சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. சென்னை-திருவனந்தபுரம் விரைவு ரயில் உட்பட 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக 13 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் 180 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 64,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மழை, வெள்ளப் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Loading...

இதற்கிடையே, எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக் கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வடக்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மழை இடர்பாட்டில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். அல்மட்டி, நாராயண்புரா ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஒரு லட்சத்து 30,000 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உடுப்பி, தட்சண கன்னடா, குடகு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டத்திற்குபட்ட போலாவரம் மண்டலத்தில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விமானத்தில் பறந்து ஆய்வு செய்தார்.

மேலும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. கோலாப்பூர், சங்கிலி மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இந்த இரு மாவட்டங்களின் குறுக்கே பாயும் பஞ்சகங்கா மற்றும் கிருஷ்ணா ஆறுகளின் கரையோரம் வசிக்கும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோலாப்பூர் வழியாக செல்லும் மும்பை-பெங்களுரு நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டுள்ளது. சங்கிலி மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன மேலும் 8 பேரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், கடற்படை, கடலோர காவல்படையினர் மூலம் மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. இதுவரை 2,85,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் மழை பாதிப்பிற்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீட்பு பணியில் நிறைய சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். மக்களின் பாதுகாப்பு முக்கியம். பாதுகாப்பில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. படகில் செல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது.நீரின் அளவு அதிகம் இருக்கும் அளவுக்கு அலையின் வேகமும் அதிகமாக உள்ளது. முடிந்த அளவுக்கு மக்களை மீட்டு வருகிறோம்.

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 86-க அதிகரித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையில் நீர் மட்டம் 131.5 அடியை எட்டியதை அடுத்து, அணையில் இருந்து 96,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், நர்மதா, பரூச் மாவட்டங்களில் நர்மதா ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...