கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அளவில் 204 மில்லி மீட்டர் பதிவாகும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புபடையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
மாதிரிப் படம் (PTI)
  • News18
  • Last Updated: July 17, 2019, 9:28 AM IST
  • Share this:
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல கேரளாவில் ஜூலை 18,19 மற்றும் 20-ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடுக்கி, மலபார் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் வேலூர்,காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என கூறியுள்ளது.

அத்துடன், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, கேரளாவில் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணூர், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை


இங்கு, அடுத்த 24 மணி நேரத்தில் மழை அளவில் 204 மில்லி மீட்டர் பதிவாகும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புபடையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Also see... மழைநீர் சேமிப்பால் கோடையிலும் சமாளிக்கும் வேலூர் மருத்துவ தம்பதிகள்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading