கனமழையால் கேரளாவுக்கு ‘ரெட் அலர்ட்’... வெள்ளத்தில் மூழ்கிய மஹாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்கள்!

திரிச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

கனமழையால் கேரளாவுக்கு ‘ரெட் அலர்ட்’... வெள்ளத்தில் மூழ்கிய மஹாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்கள்!
அகமதாபாத் மழை வெள்ளம்
  • News18
  • Last Updated: August 8, 2019, 12:27 PM IST
  • Share this:
இந்தியாவின் பல மாநிலங்களைக் கனமழை புரட்டி எடுத்து வருகிறது. பெரும் மழையின் காரணமாக கேரளா மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடைவிடாத மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கோலாபூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருப்பிடம் இன்றி கடும் மழையால் தவித்து வருகின்றனர்.

இதேபோல் கேரளாவிலும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் திரிச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.


ஒடிசா, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் கடுமையான மழையாலும் வெள்ளப்பெருக்காலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் பாதுகாப்பு மீட்புப் படையினர் அனைத்து மாநிலங்களிலும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டு அழைத்துச் செல்கின்றனர். இதனால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: காஷ்மீர் விவகாரம்: இந்தியத் தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான்
First published: August 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்