Home /News /national /

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என கேரள முதல்வர் தகவல்..

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என கேரள முதல்வர் தகவல்..

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

புரெவி புயல் தாக்கத்தால் கேரளாவில் இன்று முதல் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பத்தனம்திட்டா உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    புரெவி புயல் தாக்கத்தால் கேரளாவில் இன்று முதல் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அப்போது, புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என மோடி உறுதியளித்தார்.

    முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், புரெவி புயல் திருவனந்தபுரத்தை நாளை கடந்து செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறினார். இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தினம்திட்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாகவும் பினராயி விஜயன் கூறினார்.

    மேலும் படிக்க.. புயல் வரும்போது முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

    மேலும் பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை உடன் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கடக்கும் வரை சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். என்ன விதமான கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என முடிவெடுக்கும்படி பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cyclone, Cyclone burevi, Kerala, Pinarayi vijayan, Red Alert

    அடுத்த செய்தி