• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு 2 கோடி தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு 2 கோடி தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை

தடுப்பூசி

தடுப்பூசி

பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி, நாடு முழுவதும் ஒரே நாளில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை புரியப்பட்டுள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பல முறை, ஒரே நாளில் ஒரு கோடிக்கு அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு சாதனை புரியப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி இன்று நாடு முழுவதும் ஒரே நாளில் 2 கோடி டோஸ் தடுப்பூசி போட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தடுப்பூசி போடாதவர்கள் திரளாக வந்து போட்டுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதற்காக நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாலை 5.15 மணி அளவில் 2 கோடி டோஸ் என்ற சாதனை இலக்கு எட்டப்பட்டு, அதையும் தாண்டி பல லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மோடியின் பிறந்த நாளையொட்டி, சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் பாஜக சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடி தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளதாகவும் அவரால் தமிழகம் அதிக பயனடைந்துள்ளதாகவும் கூறினார்.

    Also Read : தானியங்களை கொண்டு 8 அடி நீளத்திற்கு மோடி உருவப்படத்தை வரைந்த பெண் கலைஞர்!

     

    சென்னை கொளத்தூர் ரெட்டேரி அருகே லட்சுமிபுரம் பெருமாள் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வழிபாடு நடத்தினார். இதையடுத்து, ஆயிரத்து 8 பெண்கள் கலந்துகொண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது.  மயிலாடுதுறையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பாஜக-வினர், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தனர்.

    Also Read : பிரதமர் மோடியின் ஆரம்பக் கால அரிய புகைப்படங்கள்

    நெல்லை டவுன் சந்தி விநாயகர் கோயிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதில், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டம் கோனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 71 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: