நாடு முழுவதும் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டுமென மக்களவையில்
திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் வலியுறுத்தினார்.
மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய திமுக எம்.பி, தமிழச்சி தங்க பாண்டியன், "சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நடந்த முக்கிய சமூக மாற்றங்களில் சுயமரியாதை திருமண முறையும் ஒன்று. வழக்கமான திருமணங்களில் பிராமண புரோகிதர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் தேவையற்ற சடங்குகளை வற்புறுத்துகிறார்கள். இதனால் குடும்பங்கள் கடன் வலையில் சிக்குகின்றன. வரதட்சணை கொடுமையும் மிக அதிகமாக இருந்தது.
பிராமண புரோகிதர்கள் இல்லாமல் திருமணங்களை நடத்தினால் மட்டுமே தேவையற்ற சடங்குகளையும், செலவுகளையும் தவிர்க்க முடியும் என நினைத்து சுயமரியாதை திருமணத்தை பெரியார் பரிந்துரைத்தார். இந்தியாவில் முதல் மாநிலமாக, தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவால் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது’ எனத் தெரிவித்தார்.
மேலும், சுயமரியாதை இயக்கம் சாதிகளுக்கு இடையிலான திருமணங்கள், விதவை மறுமணங்களை ஊக்குவித்தது. 11 வயதில் விதவையான சிவகாமி அம்மையார் போன்றோர் மறுமணக் கொள்கையால் புதுவாழ்வு பெற்றதாக கூறிய அவர், சுயமரியாதை திருமணங்கள் 1928 முதல் நடைமுறையில் இருந்தாலும், பிராமண புரோகிதர் இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணங்களை சட்டப்பூர்வமாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என் பேசினார்.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் வைரலாகும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் நடனம்...
இந்தியாவில் நமிதா திருமண அமைப்பின் கீழ் சுயமரியாதை திருமணங்களை நாடு முழுவதும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.