• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘அவமதிக்கப்பட்டேன்’ - முதல்வர் பதவி விலகலுக்கு அமரீந்தர் சிங் சொன்ன காரணம்!

‘அவமதிக்கப்பட்டேன்’ - முதல்வர் பதவி விலகலுக்கு அமரீந்தர் சிங் சொன்ன காரணம்!

captain amarinder singh

captain amarinder singh

நான் மிகவும் அவமானப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளவரை முதல்வராக்கட்டும்.

  • Share this:
காங்கிரஸ் கட்சியில் தான் அவமதிப்பை சந்தித்து வந்ததாக பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார் கேப்டன் அமரீந்தர் சிங்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக பஞ்சாபின் முதலமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்து அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமரீந்தர் சிங்.

சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்ற அமரீந்தர் சிங், தனது தலைமையிலான அமைசசரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் நேரில் அளித்தார்.

ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் தான் அவமானத்தை சந்தித்ததாக கூறினார்.

அமரீந்தர் சிங் மேலும் கூறுகையில், “முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக இன்று காலை கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்தேன். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று 3வது முறையாக நடைபெறுகிறது. நான் மிகவும் அவமானப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளவரை முதல்வராக்கட்டும்.

Also Read: பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கேப்டன் அமரீந்தர் சிங்

3வது முறையாக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது, இதற்கு மேல் என்னால் இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாது” என அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

அமரீந்தர் சிங் விலகிய நிலையில், பஞ்சாப் மாநிலத்துக்கு புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

பஞ்சாப் மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்திருக்கிறார். அமரீந்தரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என 50 எம்.எல்.ஏக்கள் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கேப்டன் அமரீந்தர் சிங், சோனியா காந்தியின் கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வரப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: