ஹோம் /நியூஸ் /இந்தியா /

பதவி விலகத் தயங்கமாட்டேன் - கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை

பதவி விலகத் தயங்கமாட்டேன் - கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை

சித்தராமையா

சித்தராமையா

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக மாநில அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி, ‘சித்தராமையா தான், இன்னமும் முதல்வராக இருப்பதாக கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு தயங்கமாட்டேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி மாநில முதல்வராக இருந்து வருகிறார். இந்தநிலையில், நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக மாநில அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி, ‘சித்தராமையா தான், இன்னமும் முதல்வராக இருப்பதாக கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

  மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ, ‘புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றதலிருந்து கர்நாடகாவில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளவில்லை’ என்று தெரிவித்தார்.

  அதனால் ஆத்திரமடைந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, ‘எம்.எல்.ஏக்களின் விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கவனத்தில் கொள்ளவேண்டும். இதேநிலைப்பாட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்தால் நான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கு தயங்கமாட்டேன். அவர்கள், எல்லையைத் தாண்டுகிறார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை, அக்கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்தவேண்டும்’ என்று தெரிவித்தார்.

  இதுகுறித்து கருத்து தெரிவித்த சித்தராமையா, ‘நான் குமாரசாமியுடன் பேசினேன். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. ’ என்றார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: HD Kumaraswamy, Karnataka