HOME»NEWS»NATIONAL»ready to protest till may 2024 farmers assertive in their position mut

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் 2024-ம் ஆண்டு தேர்தல் வரை போராட்டம் நீடிக்கும்: விவசாய அமைப்பினர் திட்டவட்டம்

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் 2024ம் ஆண்டு மே மாதம் வரை, அல்லது அடுத்த லோக்சபா தேர்தல் வரை போராட்டம் நீடிக்கும் என்று விவசாயச் சங்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் 2024-ம் ஆண்டு தேர்தல் வரை போராட்டம் நீடிக்கும்: விவசாய அமைப்பினர் திட்டவட்டம்
விவசாயிகள் போராட்டம்.
  • Share this:

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் 2024ம் ஆண்டு மே மாதம் வரை, அல்லது அடுத்த லோக்சபா தேர்தல் வரை போராட்டம் நீடிக்கும் என்று விவசாயச் சங்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு வேளாண் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ,உ.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டில்லி எல்லைப்பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் கடந்த ஆண்டு நவ.,26-ம் தேதி முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் விவசாயி்களின் பிரதிநிதிகளுடன் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. உச்ச நீதிமன்றமும் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதோடு கமிட்டியையும் அமைத்துள்ளது.

ஆனால் இந்தக் குழுவில் உள்ளவர்கள் வேளாண் சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் நாக்பூரில் பாரதிய கிஸான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கைட் செய்தியாளர்களை சந்தித்தார்.



‘கருத்தியல் புரட்சி’:

ராகேஷ் டிக்கைட் கூறும்போது, “விவசாயச் சட்டங்களை எதிர்த்து அடுத்த மக்களவை தேர்தல் வரை, அதாவது 2024 மே மாதம் வரை போராடுவோம், இப்போது நடைபெறும் போராட்டம் கருத்தியல் புரட்சியாகும்.

அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றேயாக வேண்டும், குறைந்தப்பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உறுதியளிக்க வேண்டும். வேண்டுமென்றே இந்தப் போராட்டம் பணக்கார விவசாயிகளினால் தூண்டப்படுகிறது என்று பொய் பரப்பப்பட்டு வருகிறது. கிராமங்களில் இருக்கும் விவசாயிகளும் கூட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் நாங்கள் திரும்பக் கூடாது என்றே எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் அரசு பிடிவாதம் பிடிக்கிறது, எனவே இந்தப் போராட்டம் நீண்ட நாட்கள் நீடிக்கும்” என்றார்.

இதுவரை அரசுக்கும் 41 விவசாய அமைப்புகளுக்குமான பேச்சுவார்த்தையில் எந்த வித சுமுக தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில்தான் 2024ம் ஆண்டு வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.
Published by:Muthukumar
First published: