கும்பல் கொலைகளை ஊக்குவிப்பவர் மீது என்னால் அன்பு செலுத்த முடியாது! கெஜ்ரிவால் காட்டம்

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிப்பவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். அடால்ப் ஹிட்லர், அவருக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்வதைத் தடுத்தார்.

கும்பல் கொலைகளை ஊக்குவிப்பவர் மீது என்னால் அன்பு செலுத்த முடியாது! கெஜ்ரிவால் காட்டம்
அரவிந்த் கெஜ்ரிவால்
  • News18
  • Last Updated: May 8, 2019, 8:29 PM IST
  • Share this:
கும்பல் கொலைகளையும், கலவரத்தையும் ஊக்குவிப்பர் மீது என்னால் அன்பு செலுத்த முடியாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், ‘ராகுல் காந்தி வேண்டுமானால், பிரதமர் மோடியை விரும்பலாம். ஆனால், நான் மோடியை வெறுக்கிறேன்.

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிப்பவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். அடால்ப் ஹிட்லர், அவருக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்வதைத் தடுத்தார். கும்பல் கொலைகள், கலவரங்களை ஊக்குவிப்பவர், அரசியல்சாசனத்தை அவமதிப்பவர் மீது என்னால் அன்பு செலுத்த முடியாது.


மோடி, அமித்ஷா கூட்டணியை ஆட்சியிலிருந்து விரட்டுவதுதான் எங்களது நோக்கம். நிதின் கட்கரி, பிரதமராவதற்கு ஆதரவு அளிக்கத் தயார். டெல்லி மாநில அந்தஸ்து அளிக்க காங்கிரஸ் தயாராக இருந்தால், ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு ஆதரவு அளிப்போம்’ என்றார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Also see:

First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்