ஹோம் /நியூஸ் /இந்தியா /

நல்வழியில் செயல்பட இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும்.. பிரதமர் மோடி

நல்வழியில் செயல்பட இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும்.. பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இளைஞர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுயசரிதை மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை வாசிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

சுபாஷ் சந்திர போஸின் 126வது பிறந்தநாளையொட்டி, இளைஞர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உங்கள் தலைவரை அறிவோம் திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை சந்தித்தனர். அப்போது, நல்வழியில் செயல்பட இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும் என்றும் அதிலும் தலைவர்களின் சுய சரிதைகளை ஆர்வத்துடன் படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

இதனிடையே 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 6 சிறுவர்கள், 5 சிறுமிகளுக்கு, பால் சக்தி புரஸ்காரின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கினார். விருது வென்ற சிறுவர் மற்றும் சிறுமிகளை, டெல்லியில் உள்ள செவன் லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினர்.

புதுமை, சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம். வீரம் ஆகிய ஆறு பிரிவுகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: PM Modi