• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரம் - புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரம் - புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்குமவகையில், அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டு வர மத்திய அரசு முடிவு.

  • Share this:
    இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓபிசி) மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் புதிய சாதிகளை சேர்த்துக் கொள்ள மீண்டும் அதிகாரம் அளிப்பது தொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    நிலங்களுக்கு ஏற்கெனவே இருந்த இந்த அதிகாரம், அரசியல் சட்டத்தின் 102ஆவது திருத்தத்தின் மூலம் பறிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 102ஆவது அரசியல் சட்ட திருத்தம், சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய சாதிகளை ஓபிசி பட்டியலில் சேர்க்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாக கடந்த மே 5ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்தது.

    இந்த உத்தரவை, மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்குமவகையில், அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அந்த சோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

    Must Read : சிலிண்டரில் எரிவாயு சேமிப்பு என போலி கருவி பொருத்தி பணம் பறிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பள்ளி கல்விக்கான ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. அதாவது, 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை இந்தத் திட்டம் தொடரும். இதற்கு ‘சமக்ரா சிக்ஷா-2’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 283 கோடியே 4 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் பங்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 398 கோடியாக இருக்கும். மாணவர்களுக்கு திறமைகளை கற்றுத் தந்து, தரமான கல்வியை அளிப்பதே இதன் நோக்கம். நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 15 கோடியே 50 லட்சம் மாணவர்களும், பணியாற்றும் 57 லட்சம் ஆசிரியர்களும் இத்திட்டத்தால் பலன் அடைவார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நாடு முழுவதும் 28 மாநிலங்களில் செயல்பட்டு வரும் 1,023 விரைவு நீதிமன்றங்களை மத்திய அரசின் நிதியுடன் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இவற்றில் 389 நீதிமன்றங்கள், ‘போக்சோ’ சட்ட வழக்குகளை விசாரிப்பவை ஆகும். 1,023 நீதிமன்றங்களுக்கு ரூ.1,572 கோடியே 86 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் பங்கு ரூ.971 கோடியே 70 லட்சமாகவும், மாநில அரசுகளின் பங்கு ரூ.601 கோடியே 16 லட்சமாகவும் இருக்கும். ‘நிர்பயா’ நிதியில் இருந்து மத்திய அரசின் பங்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: