Home /News /national /

மோசடி லோன் செயலிகளை கணக்கெடுக்கும் ரிசர்வ் வங்கி.. மோசடியை தடுக்க நிதியமைச்சகம் அதிரடி திட்டம்!

மோசடி லோன் செயலிகளை கணக்கெடுக்கும் ரிசர்வ் வங்கி.. மோசடியை தடுக்க நிதியமைச்சகம் அதிரடி திட்டம்!

சட்ட விரோத கடன் செயலிகளை முடக்க அரசு விரிவான திட்டம்

சட்ட விரோத கடன் செயலிகளை முடக்க அரசு விரிவான திட்டம்

மோசடி கடன் செயலி பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    இந்தியாவில் தற்போது தலையாய பிரச்னைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது 'மோசடி லோன் ஆப்கள்'. குறிப்பாக தமிழ்நாடு இந்த லோன் செயலிகள் பிரச்சனை காரணமாக மிரட்டல் அதைத் தொடர்ந்து தற்கொலைகள் என விவகாரம் சமீப காலமாக பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    முறைப்படியான வங்கி நடவடிக்கைகளுக்கு வெளியே “சட்டவிரோத கடன் செயலிகள்” தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி பிரதிநிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் முடிவுகள் குறித்து நிதி அமைச்சகம் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "நலிந்த பிரிவு மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு அதிக வட்டி விகிதங்கள், செயல்முறை கட்டணங்கள் இல்லாமல் கடன்கள் மற்றும் நுண் கடன்கள் வழங்குவதாக சட்டவிரோத கடன் செயலிகள் பற்றிய தகவல்கள், மிரட்டுதல் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் முன்கூட்டியே பணத்தை திரும்ப பெறுதல் போன்ற சம்பவங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் கவலை தெரிவித்தார்.

    இதன் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குதல், வரிஏய்ப்பு, தனிநபர் தரவுப்பாதுகாப்பை மீறுதல், ஒழுங்குப்படுத்தப்படாமல் பணம் செலுத்து முறையை தவறாக பயன்படுத்துதல், போலி நிறுவனங்கள் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுத்துள்ளது.

    இதை சீரமைக்கும் விதமாக மோசடி செயலிகளை கண்டறிந்து களைய, இனி அனைத்து சட்டப்பூர்வமான செயலிகளை கணக்கெடுத்து “வெள்ளை அறிக்கை”யை ஆர்பிஐ தயாரிக்கும். இந்த வெள்ளை அறிக்கையில் உள்ள செயலிகளை மட்டும் ஆப் ஸ்டோர்கள் வழங்குவதை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உறுதி செய்யும். கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன்படுத்தும் போலிக் கணக்குகளை ஆர்பிஐ கண்காணிக்கும்.

    இதையும் படிங்க: உஷார்.. ஹேக்கர்ஸ் இப்படித்தான் உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து பணத்தை திருடுகிறார்கள்.!

    குறிப்பிட்ட கால வரம்புக்குள் வர்த்தக கணக்கு வைத்திருப்போர் பதிவு பூர்த்தி செய்யப்படுவதை ஆர்பிஐ உறுதிப்படுத்தும். இதன் பிறகு பதிவு செய்யப்படாத வர்த்தக கணக்கு வைத்திருப்போர் பணம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
    போலி நிறுவனங்களை கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் கண்டறிந்து அவற்றை பதிவிலிருந்து நீக்கும்.

    வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள், சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் தொடர்புடையவர்களுக்கு கணினி சார்ந்த விழிப்புணர்வை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
    இத்தகைய சட்டவிரோத கடன் செயலிகள் செயல்படுவதை தடுப்பதற்கு அனைத்து அமைச்சகங்களும், முகமைகளும், சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
    இவை நடைமுறைப்படுத்தப்படுவதை தொடர்ச்சியாக நிதியமைச்சகம் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Loan app, RBI

    அடுத்த செய்தி