ஹோம் /நியூஸ் /இந்தியா /

பைக், கார் EMI.. வீட்டுக்கடன் வட்டி உயரும் அபாயம் - 4ஆவது முறையாக உயர்ந்த ரெப்போ வட்டி

பைக், கார் EMI.. வீட்டுக்கடன் வட்டி உயரும் அபாயம் - 4ஆவது முறையாக உயர்ந்த ரெப்போ வட்டி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நாட்டின் பணவீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக அறிவித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 28) தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று முடிவடைந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து நிதிக் கொள்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, நாட்டின் பணவீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக அறிவித்தார்.

  இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த ரெப்போ வட்டி உயர்வுக்கு ஆதரவாக நிதிக்கொள்கை குழுவின் ஆறு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

  நாட்டின் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தவே ரெப்போ வட்டியை நான்காவது முறையாக உயர்த்தி ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது, வங்கிக்கடன் பெறும் பொது மக்கள் பலரை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் கூடுதல் வட்டியை கட்ட, வங்கிகள் அந்த வட்டி சுமையை தங்கள் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தும்.

  அதாவது, ரெப்போ வட்டி உயர்ந்தால் வாடிக்கையாளர்கள் கடனுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தும், ரெப்போ வட்டி குறைந்தால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும். தற்போது ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகள், வீட்டுக்கடன், வாகன கடன் போன்றவற்றுக்கான வட்டியை அதிகரிக்கும். இது வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும்.

  இதையும் படிங்க: ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளோம் - பிரதமர் நரேந்திர மோடி

  தொடர்ந்து பொருளாதார சூழல் குறித்து தெரிவித்த ரிசரவ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், உலக நாடுகள் மத்தியில் நிலவும் போர்சூழல், உலகளவில் நிதி புழக்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தேவையின் குறைவு போன்ற சூழல் காரணமாக வளர்ச்சி மந்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.

  எனவே, 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் முன்பு 7.2 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்த நிலையில் அது 7 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பணவீக்க வீகிதம் எந்தமாற்றமும் இல்லாமல் 6.7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: RBI, Repo rate, Shakthikantha Das