ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரிசர்வ் வங்கி ஆளுநரின் எச்சரிக்கையை மீறி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு - ஆர்.டி.ஐ தகவல்

ரிசர்வ் வங்கி ஆளுநரின் எச்சரிக்கையை மீறி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு - ஆர்.டி.ஐ தகவல்

பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பு நீக்கம்

ரிசர்வ் வங்கி இயக்குநர்களின் எச்சரிக்கையையும் மீறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது பிரதமர் மோடியின் நிர்வாக தோல்வியை பறைசாற்றுகிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது தெரியவந்துள்ளது. 

கறுப்பு பண புழக்கத்தை ஒழிக்கும் விதமாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதாக கூறி, பிரதமர் நரேந்திர மோடி, 2016 நவம்பர் 8-ம் தேதி திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால், அந்த அறிவிப்புக்கு இரண்டரை மணி நேரத்துக்கு முன்புதான் அப்போதைய ரிசர்வ் வங்கி இயக்குநர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார். இது தற்போது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னர் உர்ஜித் படேல் மற்றும் தற்போதைய கவர்னருமான சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல்.

அப்போது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக அதிக அளவில் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க இருப்பதாக பிரதமர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த முடிவால் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் எச்சரித்துள்ளனர்.

சக்திகாந்த தாஸ்

கறுப்புப் பணத்தை வைத்துள்ளவர்கள் பெரும்பாலும் அதை ரொக்கமாக வைத்திருக்கவில்லை என்றும் தங்கம், சொத்துகளாக வைத்துள்ளதுடன் ரியல் எஸ்டேட் தொழில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

எனவே, பணமதிப்பிழப்பால் கறுப்புப்பணத்தை ஒழிக்க முடியாது என்றும், இது அவர்களின் சொத்துகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், அப்போதைய சூழலில் கறுப்புப் பணம் 400 கோடி ரூபாய் அளவில் இருந்ததாகவும், புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவே எனவும் ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

Modi Govt
பிரதமர் மோடி

அதேவேளையில் இந்த நடவடிக்கை பொதுமக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்ற உதவும் என்று அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது நலன் கருதி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் ஆதரவு தெரிவித்ததாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இதுதொடர்பாக 5 வாரங்கள் கழித்து 2016 டிசம்பர் 15-ம் தேதிதான், ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்டதும் ஆர்.டி.ஐ. தகவலில் அம்பலமாகியுள்ளது.

மேலும், செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் 99 விழுக்காடு திரும்ப பெறப்பட்டதாக 2 ஆண்டுகளுக்குப் பின் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதற்கிடையில், ரிசர்வ் வங்கி இயக்குநர்களின் எச்சரிக்கையையும் மீறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது பிரதமர் மோடியின் நிர்வாக தோல்வியை பறைசாற்றுகிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பா. சிதம்பரம்

அன்றைய சூழலில் நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே 86 விழுக்காடு இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் என எச்சரித்துள்ளார்.

Also see... வடிவேலு பட பாணியில் குழாய் இணைப்பை காணவில்லை புகார்... கிடைத்த பலன் என்ன தெரியுமா? 

Published by:Vaijayanthi S
First published:

Tags: Demonetisation, RBI