• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸூக்கு கொரோனா தொற்று

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸூக்கு கொரோனா தொற்று

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

  • Share this:
    இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி தான். தற்போது உடல்நிலை சீராக உள்ளது. என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோத்து கொள்ளவும். என்னுடைய பணிகளை தனிமைப்படுத்தி கொண்டு தொடர்ந்து ஈடுபடுவேன். ரிசர்வ் வங்கி தொடர்புடைய பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும். துணை ஆளுநர் மற்றும் மற்ற அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ், தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன்“ என்றுள்ளார்.



    ஆர்.பி.ஐ ஆளுநரின் இந்த பதிவை தொடர்ந்து அவர் விரைவில் கொரேனாவிலிருந்து குணமடைய வேண்டுமென பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: