ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டிவிகிதம் 0.35% குறைப்பு!

தொடர்ந்து 4-வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டிவிகிதம் 0.35% குறைப்பு!
ரிசர்வ் வங்கி
  • News18
  • Last Updated: August 7, 2019, 2:40 PM IST
  • Share this:
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து 4-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக வட்டி குறைந்தும் வாடிக்கையாளர்களுக்கு அதன் பலன்களை தர வங்கிகள் தயக்கம் காட்டுவது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதி கொள்கை வகுப்புக் கூட்டத்தில் ரெப்போ எனப்படும் இந்த வட்டி விகிதத்தை 5.75-ல் இருந்து, 5.40 ஆக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டில் 6.5 சதவீதமாக இருந்து ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 0.35 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக ரெப்போ விகிதம் குறைக்கப்படும்போதெல்லாம் வீட்டு வசதிக் கடன் மற்றும் வாகனக் கடனும் குறையும். எனினும் கடந்த ஓராண்டில் ஒரு சதவீதம் வரை வட்டி விகிதம் குறைந்துள்ள போதிலும் வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைக்க எந்த வங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனினும் பாரத ஸ்டேட் வங்கி டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை மட்டும் குறைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தாலும் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு தர மறுக்கும் வகையில் கடன்களுக்கான வட்டியை குறைக்க வங்கிகள் தயங்குவதற்கான காரணம் புரியாமல் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுபோல் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தையும் 35 புள்ளிகள் குறைத்துவிட்டது. இதற்கும் அதற்கும் சரி என்பது போல் இருபுறமும் 35 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் வட்டியை குறைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Also watch

First published: August 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்