மத்திய அரசுக்கு ரூ.99,122 கோடி உபரி நிதியை வழங்கும் ரிசர்வ் வங்கி

ஆர்பிஐ

கடந்த 9 மாத காலத்தில், அதாவது ஜூலை 2020 - 2021 மார்ச்) ரிசர்வ் வங்கியின் உபரிநிதியான ரூ.99,122 கோடியை மத்திய அரசுக்கு வழங்க வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

 • Share this:
  கொரோனா வைரஸ் 2-வது அலையால் பல்வேறு செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வரும் நிலையில், உபரித்தொகை ரூ.99 ஆயிரத்து 122 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

  கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களினால் வரிவருவாய் குறைந்து நிதிச்சிக்கல் போன்ற பிரச்சினைகளில் சிக்கியிருந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட உபரி நிதியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்க முன்வந்துள்ளது.

  இதற்கு முன் 2018-19ஆம் ஆண்டில் ரூ.1.76 லட்சம் கோடியை வழங்கியிருந்தது. இதில் ரூ.1.23 லட்சம் கோடி ஈவுத்தொகையாகும். ரூ.52,637 கோடி திருத்தப்பட்ட பொருளாதார முதலீடு கட்டமைப்பு நிதியாக வழங்கப்பட்டது.

  வழக்கமாக ரிசர்வ் வங்கி தனது ஈவுத்தொகை கணக்கீட்டை நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் முதல் மார்ச் வரை எடுக்கும். ஆனால், இந்த முறை ஜூன் முதல் ஜூலை வரையிலான 9 மாதங்களைக் கணக்கில் எடுத்துள்ளது.

  ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

  ''2021, மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த 9 மாத கணக்கீடு காலத்தில் சந்தை செயல்பாடுகள், முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த ஈவுத் தொகையான ரூ.99,122 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

  ரிசர்வ் வங்கி வாரியம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதாரச் சூழல், உலகப் பொருளாதாரச் சூழல், உள்நாட்டளவில் சந்திக்கும் பிரச்சினைகள், கொரோனா 2-வது அலையிலும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பைத் தணிக்க ரிசர்வ் வங்கி எடுத்த நிதிக்கொள்கை முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

  கடந்த 9 மாத காலத்தில், அதாவது ஜூலை 2020 - 2021 மார்ச்) ரிசர்வ் வங்கியின் உபரிநிதியான ரூ.99,122 கோடியை மத்திய அரசுக்கு வழங்க வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அவசரகால நிதியின் அளவு 5.50 சதவீதம் வைத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது''.

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Muthukumar
  First published: