• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டெபாசிட்டுகள் பாதுகாப்பாக இருக்குமா..? விளக்கமளித்த ரிசர்வ் வங்கி..!

டெபாசிட்டுகள் பாதுகாப்பாக இருக்குமா..? விளக்கமளித்த ரிசர்வ் வங்கி..!

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

அனைத்து வங்கிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் ரிசர்வ் வங்கி உறுதியளித்துள்ளது.

  • Share this:
    வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பத்திரமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    நிதி நெருக்கடி மற்றும் மோசடி புகாருக்கு உள்ளான யெஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 50,000 ரூபாய் மட்டுமே பணம் எடுத்துக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மற்ற வங்கிகளின் நிதிநிலையும் மோசமாக உள்ளதால் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகள் பாதுகாப்பாக இருக்குமா என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

    அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, அப்படிப்பட்ட செய்திகளில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது.

    பங்குச்சந்தையில் வங்கிகளின் மொத்த மதிப்பீட்டை கணக்கில் கொண்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு இருப்பதாகவும், ஆனால் வங்கியின் மதிப்பீட்டை கணக்கிட இது சரியான நடைமுறை இல்லை என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    அனைத்து வங்கிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் டெபாசிட் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளது.

    Also see...


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: