ரமோன் மகசேசே விருதுகள் அறிவிப்பு - இந்திய ஊடகவியலாளர் ரவீஷ் குமார் தேர்வு

news18
Updated: August 2, 2019, 10:28 AM IST
ரமோன் மகசேசே விருதுகள் அறிவிப்பு - இந்திய ஊடகவியலாளர் ரவீஷ் குமார் தேர்வு
ரமோன் மகசேசே விருது (கோப்புப்படம்)
news18
Updated: August 2, 2019, 10:28 AM IST
ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ரமோன் மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து ஊடகவியலாளர் ரவீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மூன்றாவது அதிபரான மறைந்த ரமோன் மகசேசே பெயரில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் மகசேசே விருது வழங்கப்படுகிறது. இதன்படி, ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளில் சுயநலமில்லாமல் இல்லாமல் பொதுநல பணி, சமூகப் பணி உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வரும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் மகசேசே விருது அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் மகசேசே விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் மறைந்த ரமோன் மகசேசே உருவம் பொறித்த பதக்கம் வழங்கப்படும். இந்நிலையில், 2019-ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஊடகவியலாளர் ரவீஷ் குமார்


இந்திய ஊடகவியலாளர் ரவீஷ் குமார் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். குரலற்ற மக்களின் குரலாக அவர் இருந்ததாக தேர்வுக்கமிட்டி குறிப்பிட்டுள்ளது. ரவீஷ் குமார் தவிர மியான்மரின் கோ ஸ்வீ வின், தாய்லாந்தின் அங்கானா நீலாபைஜித், பிலிப்பைன்ஸின் காயாப்யாப், தென் கொரியாவின் கிம் ஜாங் கி என மொத்தம் 5 பேரு விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

கடந்தாண்டு இந்தியாவை சேர்ந்த பரத் வாத்வானி, சோனம் வாங்குக் ஆகியோர் இந்த விருதைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...