குஜராத் மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து பாஜக தொடர்ந்து 7ஆவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் பாஜக சார்பில் பிரபல கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா களமிறங்கினார். அம்மாநிலத்தின் ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ரிவாபா ஜடேஜாவுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனபா ஜடேஜாவை காங்கிரஸ் தனது வேட்பாளராக களமிறக்கியது.
ரவீந்திர ஜடேஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் நேருக்கு நேர் மோதியதால் ஜாம்நகர் வடக்கு தொகுதி முடிவுகளை பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கினர். குறிப்பாக தனது மனைவிக்காக தீவிர தேர்தல் பரப்புரையில் ரவீந்திர ஜடேஜா ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தார். இந்நிலையில் இன்று காலை முடிவுகள் வெளியாகத் தொடங்கிய நிலையில், ஆரம்பத்தில் இருந்தே ரிவாபா முன்னிலையில் உள்ளார்.
இதையும் படிங்க: குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் பாஜக.. பாதாளம் சென்ற காங்கிரஸ்!
மத்தியம் 12 மணி நிலவரப்படி சுமார் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று ரிவாபா முன்னிலையில் உள்ளார். இதன்மூலம் ரிவாபாவின் வெற்றி உறுதியானது. எனவே, ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏவாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா சட்டப்பேரவைக்குள் நுழையவுள்ளார். இவரை எதிர்த்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனாபா ஆம் ஆத்மி வேட்பாளரை விட குறைவான வாக்குகளே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assembly Election 2022, BJP, Gujarat, Gujarat Assembly Election, Ravindra jadeja