ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஒரே தொகுதியில் மோதும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி, சகோதரி : பரபரப்பாகும் குஜராத் தேர்தல் களம்

ஒரே தொகுதியில் மோதும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி, சகோதரி : பரபரப்பாகும் குஜராத் தேர்தல் களம்

மாதிரி படம்

மாதிரி படம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு எதிராக ஜடேஜாவின் சசோதரி தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதால் குஜராத் தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தேர்தல் நடக்கிறது. இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 8-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  இந்த நிலையில் குஜராத்தின் ஜாம் நகர் தொகுதியின் வேட்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா அறிவிக்கப்பட்டார். மேலும் அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிபேந்திர சிங் ஜடேஜா போட்டியிடுகிறார். எனவே, காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஜடேஜாவின் சகோதரி நைனாபா ஜாம் நகர் தொகுதியில் பிரசாரத்துக்காக களமிறக்கப்பட்டிடுள்ளதால் ஜாம் நகரில் தேர்தல் பரப்புரை பரபரப்பாகியுள்ளது.

  Also Read: காதலியை 35 துண்டுகளாக வெட்டிக் கொன்ற வழக்கில் காதலன் பரபரப்பு வாக்குமூலம்

  ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தி அனுதாபங்களை பெறுவதாக ஜடேஜாவின் சகோதரி குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக ஜடேஜாவின் சகோதரி நைனாபா தெரிவித்துள்ளார்.

  ரவீந்திர ஜடேஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் நேருக்கு நேர் மோதுவதால் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் தேர்தல் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Gujarat, Ravindra jadeja