ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜடேஜாவின் மனைவிக்கு சீட் கொடுத்த பாஜக.. குஜராத் தேர்தலில் எகிறும் எதிர்பார்ப்பு!

ஜடேஜாவின் மனைவிக்கு சீட் கொடுத்த பாஜக.. குஜராத் தேர்தலில் எகிறும் எதிர்பார்ப்பு!

பிரதமர் மோடி உடன் ஜடேஜா மற்றும் அவரது மனைவி

பிரதமர் மோடி உடன் ஜடேஜா மற்றும் அவரது மனைவி

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குஜராத் தேர்தலில் இந்திய கிரிகெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக வேட்பாளராக களமிறங்க உள்ளார்.

  டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே அங்கு தேர்தல் ஜுரம் பற்றத் தொடங்கிவிட்டது. 27 ஆண்டுகளாக அங்கு அதிகாரத்தில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறது. ஆனால் டில்லி மாடல், பஞ்சாப் மாடல் ஆட்சியை முன்வைத்து குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி காய்களை நகர்த்தி வருகிறது.

  நீண்ட காலமாக ஆட்சிக்கு வரமுடியாத வெறுப்பில் காங்கிரஸ் கட்சியும் முட்டி மோதி வருகிறது. இப்படி குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பாஜக சார்பில் பல்வேறு பிரபலங்கள் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி இன்று வெளியான பாஜக வேட்பாளர்கள் லிஸ்டில் ரிவாபாவின் பெயர் இடம்பெற்றுள்ளது

  இதையும் படிங்க: கிறிஸ்தவம் , இஸ்லாமில் தீண்டாமை இல்லை... எஸ்.சி. அந்தஸ்து அவசியம் இல்லை - மத்திய அரசு

  ரிவாபா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஹரி சிங் சோலங்கியின் குடும்பத்தில் இருந்து ரிவாபா வந்திருந்தாலும் அவர் தற்போது பாஜகவின் அங்கமான கர்னி சேனாவின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதனால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தார் ரிவாபா.

  குஜராத் சட்டசபை தேர்தலில் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என கட்சித் தலைமை திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் குஜராத் தேர்தலி போட்டியிடும் 160 பாஜக வேட்பாளர்களை அந்த கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில் ஜாம் நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிபாவா போட்டியிட உள்ளதாக அந்த கட்சி தலைமை அறிவித்துள்ளது.

  மேலும் பாஜக முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. அதேபோல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஹர்திக் படேல் விரம்கம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Assembly Election 2022, BJP, Gujarath, Ravindra jadeja