• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உல்லாச கப்பலில் போதை பார்ட்டி.. சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன்

உல்லாச கப்பலில் போதை பார்ட்டி.. சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன்

Cordellia cruise ship

Cordellia cruise ship

மும்பையில் உல்லாசக் கப்பலில் போதைப் பார்ட்டி நடத்திய விவகாரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

  • Share this:
இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பல் என்ற பெருமையுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் ‘எம்பிரஸ்’ தனது பயணத்தை தொடங்கியது. இந்நிலையில் இரண்டு வாரங்களிலேயே அந்தக் கப்பல் பயணம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

மும்பை கடல் பகுதியில் இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்கள், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததால் அந்த கப்பல் முழுதும் 7 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் உள்ளிட்ட பிரபலங்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் கப்பல், கடந்த அக்டோபர் 2ம் தேதி சுற்றுலா பயணிகளுடன் தனது பயணத்தை தொடங்கியது. அக்டோபர் 4ம் தேதி வரை இந்த கப்பல் பயணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த உல்லாசக் கப்பலில் போதை பார்ட்டி நடைபெற இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் அந்தக் கப்பலில் ஏறினர்.

Also Read:  பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை – சிக்கிம் அரசின் முன்மாதிரி நடவடிக்கை!

அதிகாரிகள் கப்பலில் ஏறிய உடனேயே பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக செயலில் இறங்கிய அதிகாரிகள், அவர்களை சுற்றி வளைத்து 8 பேரை பிடித்தனர். பிடிபட்டவர்களில் பிரபலங்களின் மகன்கள் என்றும், ஒருவர் பாலிவுட் மெகா ஸ்டாரின் மகன் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களுக்கு போதைப் பொருள் உட்கொண்டார்களா என கண்டறிய சோதனை நடைபெற்றிருக்கிறது. அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Also Read:  சமந்தா – நாக சைத்தன்யா பிரிவு குறித்து நடிகர் நாகார்ஜூனா உருக்கம்!

இதனையடுத்து கப்பலின் ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர், சுமார் 7 மணி நேரமாக சோதனை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கப்பல் மீண்டும் மும்பை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு பிடிபட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ‘ஃபேஷன் டிவி இந்தியா’ இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றதுல் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் சிக்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: