• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ’வெல்கம் பேக் ஏர் இந்தியா..’ பழைய புகைப்படத்தை பகிர்ந்து ரத்தன் டாடா நெகிழ்ச்சி!!

’வெல்கம் பேக் ஏர் இந்தியா..’ பழைய புகைப்படத்தை பகிர்ந்து ரத்தன் டாடா நெகிழ்ச்சி!!

 ’வெல்கம் பேக் ஏர் இந்தியா..’  பழைய புகைப்படத்தை பகிர்ந்து ரத்தன் டாடா நெகிழ்ச்சி!!

’வெல்கம் பேக் ஏர் இந்தியா..’ பழைய புகைப்படத்தை பகிர்ந்து ரத்தன் டாடா நெகிழ்ச்சி!!

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் கைப்பற்றியுள்ள நிலையில், டாடா சன்ஸ் குழும தலைவர் ரத்தன் டாடா, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜேஆர்டி டாடாவின் பழைய புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு டாடா குழுமம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜேஆர்டி டாடாவின் பழைய புகைப்படத்தை பகிர்ந்து ரத்தன் டாடா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ரத்தன் டாடா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஏர் இந்தியா நிறுவனத்திற்கான ஏலத்தை டாடா குழுமம் வென்றது பெரும் மகிழ்ச்சி செய்தியாகும். ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் கட்டியெழுப்ப கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், விமான துறையில் டாடா குழுமத்திற்கு இது ஒரு வலுவான சந்தை வாய்ப்பை வழங்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ஒரு உணர்ச்சிப்பூர்வமான குறிப்பாக, ஏர் இந்தியா நிறுவனம் ஜேஆர்டி டாடாவின் தலைமையில் ஒரு காலத்தில், உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்ந்தது. முந்தைய ஆண்டுகளில் கிடைத்த அந்த மதிப்பையும், நற்பெயரையும் மீண்டும் பெற டாடா குழுமத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது நம்முடன் ஜேஆர்டி டாடா இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார், ”என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்துறைகளைத் தனியார் வசமாக்கும் அரசின் சமீபத்திய கொள்கைக்காக நாங்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    ”வெல்கம் பேக், ஏர் இந்தியா!" என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

    ஏா் இந்தியா நிறுவனத்தை கடந்த 1932-ஆம் ஆண்டு ஜேஆா்டி டாடா தொடங்கினாா். அப்போது அந்த நிறுவனம் டாடா ஏா்லைன்ஸ் பெயரில் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு 1946-ஆம் ஆண்டு இந்நிறுவனம் ஏா் இந்தியாவாக பெயா் மாற்றம் பெற்றது.

    1948-ஆம் ஆண்டு சா்வதேச விமான சேவையை துவக்கிய ஏா் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 49 சதவீத பங்குகளும், டாடாவுக்கு 25 சதவீத பங்குகளும், இதர பங்குகள் பொதுமக்களிடமும் இருந்தது. அதன் பிறகு, கடந்த 1953-இல் ஏா் இந்தியா நிறுவனம் தேசியமாக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவனத்தை தொடங்கிய டாடா நிறுவனத்துடனே ஏா் இந்தியா ஐக்கியமாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: