மதுவுக்கு ஆதார் கட்டாயம்..’நான் சொல்லவில்லை’ - ரத்தன் டாட்டா விளக்கம்!

ரத்தன் டாடா

இன்ஸ்டாகிராம் பதிவில், அந்த போலி டெம்பிளேட்டை பகிர்ந்து நான் இதனைக் கூறவில்லை என ரத்தன் டாடா விளக்கம் கொடுத்துள்ளார்

  • Share this:
உணவுக்கான மானியத்தை நிறுத்தி, ஆல்கஹால் வாங்க ஆதார் கட்டாயமாக்க வேண்டும் என ரத்தன் டாட்டா கூறியதாக பரவிய செய்திக்கு, நான் அவ்வாறு கூறவில்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சமூகவலைதங்கள் போலிச் செய்திகளின் புகழிடமாக விளங்குவதால், யார் பெயர் வேண்டுமானாலும் பலிகடாவாக்கப்படுகிறது. சில முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களின் பிரேக்கிங் நியூஸ் டெம்பிளேட்டுகளைப் பயன்படுத்திக் கூட போலிச் செய்திகள் பரவுவதை பார்த்திருக்க முடியும். சில நேரங்களில் அந்தக் கார்டை நாங்கள் உருவாக்கவில்லை என, உரிய செய்தி நிறுவனங்கள் தங்கள் சமூகவலைதள பக்கத்தில் விளக்கமும் கொடுப்பார்கள்.

தற்போது அப்படியான ஒரு விளக்கத்தை இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாட்டா கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். அண்மையில், உணவுப் பொருட்களுக்கு அரசு கொடுக்கும் மானியத்தை நிறுத்த வேண்டும். ஆல்கஹால் வாங்குவதற்கு ஆதார் கார்டை கட்டாயமாக்க வேண்டும். மேலும், ஆல்கஹால் வாங்குபவர்களுக்கான உணவு மானியத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். ஆல்கஹால் வாங்குபவர்களால் உணவுப் பொருட்களை வாங்க முடியும்.

Also Read:  ரூ.10,600 கோடி அபராதம்- ப்ளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

உணவுப் பொருட்களை இலவசமாக கொடுப்பதனால், அவர்கள் ஆல்கஹால் வாங்குகிறார்கள் என ரத்தன் டாட்டா கூறியதாக டெம்பிளேட் ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது. இந்த போலி டெம்ப்ளேட் பலரும் பகிர்ந்த நிலையில், டாட்டாவுக்கு எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில், தான் கூறியதாக சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வரும் செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவில், அந்த போலி டெம்பிளேட்டை பகிர்ந்து நான் இதனைக் கூறவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். இதேபோல், மற்றொரு முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா பெயரிலும் போலிச் செய்தி பரவியது. இதற்கு அவரும் விளக்கம் கொடுத்துள்ளார்.

https://twitter.com/anandmahindra/status/1433420836623499268?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1433420836623499268%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Ftrending%2Ftrending-in-india%2Fratan-tata-dubs-viral-quote-post-as-fake-news-which-asked-liquor-sales-be-linked-to-aadhar-card-7488261%2F

அதாவது, பள்ளிகளில் இருந்தே ஸ்டாக் மார்க்கெட்டிங் குறித்த பாடங்கள் சொல்லித் தரப்பட வேண்டும் என அவர் கூறியதாக ஒரு செய்தி பரவியது. இதனை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், நான் கூறியதாக பரவும் செய்திகளை மக்கள் நம்புகின்றனர். சமூகவலைதளங்களைப் பொறுத்தவரை தகவலை ஜனநாயகப்படுத்துவதற்கும், அறிவை பெருக்குவதற்குமான இடம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்தவகையில் இங்கு நான் கூறியதாக தவறான செய்திகள் பரவுகின்றன எனத் விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில நேரங்களில் இதுபோன்ற தகவல்களுக்கு முன்னணி தொழிலதிபர்கள் விளக்கம் கொடுத்தாலும், போலிச் செய்தி பரப்புபவர்கள் ஓய்வதில்லை. மீண்டும் மீண்டும் யாராவது ஒருவரின் பெயரில் தொடர்ந்து போலிச்செய்திகளை பரப்பிக் கொண்டே இருக்கின்றனர். அண்மையில், தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக, நீதிபதியின் பெயர் மற்றும் புகைப்படமிட்ட போலிச் செய்தி வேகமாக பரவியது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: